வாழ்க்கையும் போராட்டமும் வேறு வேறல்ல!

By காமதேனு

மத்தியிலும், மாநிலத்திலும் மார்க்சிஸ்ட் கட்சி பெரும் நெருக்கடியில் இருக்கிற சூழலில், அக்கட்சியின் மாநிலச் செயலாளராகியிருக்கிறார் கே.பாலகிருஷ்ணன்.

சவாலான சூழலில் எப்படிப் பணியாற்ற வேண்டும் என்பதில் ரொம்பவே கவனமாக இருக்கிறார். ஒவ்வொரு நாளும் ஓடிக்கொண்டிருக்கிறார் பாலகிருஷ்ணன். கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையைப் பெற்றுத் தரக் கோரி முதல்வர் வீட்டின் முன் மறியலில் ஈடுபட்டு கைதானவர், அடுத்து குரங்கனி தீ விபத்து நடந்த பகுதிக்குச் சென்றார்.

அங்கிருந்து திரும்பியவர் ஆவடியில் ஓ.சி.எஃப் தொழிற்சாலை மூடப்படுவதற்கு எதிரான தொழிலாளர்கள் போராட்டக் களத்துக்குச் சென்றார். “நமக்குத் தெரிஞ்சது மக்கள் அரசியல்தான். அப்படின்னா களத்துலதானே நிக்கணும்!” என்கிறார்.

அரை நூற்றாண்டாக கட்சிப் பணியாற்றிவரும் பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சிக்கு வந்ததே ஒரு சுவாரசியமான வரலாறு. ராணுவ வீரரான தந்தை, பாலகிருஷ்ணனையும் ராணுவத்திலோ காவல் துறையிலோ சேர்க்கவே விரும்பினார். இவரோ, எல்லைக்கு வெளியே இருக்கும் எதிரிகளுக்கு எதிராக அல்ல, உள்நாட்டு ஆதிக்க சக்திகளால் வதைபடும் தொழிலாளர்களுக்காகவும், அப்பாவி மக்களுக்காகவும் போராடத் தீர்மானித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE