கிருஷ்ணன் கேர் ஆஃப் வேப்பமூடு

By காமதேனு

முழுமையான முகவரியை எழுதிப் போட்டாலே கடிதங்களை சுத்தலில் விடும் இந்தக் காலத்தில்  வெறுமனே,  ‘கிருஷ்ணன் -  கேர் ஆஃப் வேப்பமூடு' என்று எழுதிப் போட்டால் கிருஷ்ணன் கைக்கு மணியார்டரே வந்துவிடுகிறது!

கிருஷ்ணன் -  கடைகளின் முன்பாகவும், சாலையோர நடைமேடைகளிலும் சங்கமித்து, வாழ்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் ஒரு பிச்சைக்காரர்.  அண்மையில் ஒரு நாள் இரவு கிருஷ்ணனின் சுகமான நித்திரையைக் கலைத்து, “என்ன பெரியவரே, உங்க இத்துப் போன சேருக்கு இவ்வளவு பாதுகாப்பா?” என்று கேட்டேன். (அடுமனையின் வாசலில் அமர்ந்து பிச்சையெடுக்கும் தனது பழைய இரும்புச் சேரையும் ஊன்றுகோலையும் அவ்வளவு இறுக்கமாய் சங்கிலியால் கட்டிப் பூட்டியிருந்தார்.)

“ராசா... ராத்திரி இங்க உவத்திரம் (தொந்தரவு) கூடுதலு. திடீர்னு எவனாச்சும் வந்து ரெண்டையும் தூக்கிட்டு போயிருவான். ஆக்கர் கடையில் போட்டா ஒரு குவாட்ருக்கு ஆச்சுல்லா!” எனப் பாதி உறக்கத்தில் படபடத்தார்.

“நீங்க குடிப்பீங்களா?” என பொதுப்புத்தியில் கேட்க, “இல்ல ராசா... குடிச்சுட்டு கிடந்தா இங்க படுக்கவிடுவாங்களா? காலையில் எட்டரை மணிக்கு கடைதிறக்கும் வரை படுத்துக்கலாம். கடை முதலாளி கடைமுன்ன நின்னு கத்திப் பிச்சை எடுக்கக்கூடாதுனு சொல்லிருக்காரு. அதனால, போற, வர்றவங்ககிட்ட கைய மட்டும் நீட்டுவேன். குடுக்கறத வாங்கிப்பேன். விபத்துல ஒரு காலு போனதால எந்த நல்லதும் நடக்கல. இந்த நிலையில இருந்துக்கிட்டு யாருக்காக உழைச்சுச் சேமிக்கணும்? இன்னிக்கு பிச்சை

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE