ஆட்சியாளர்கள் செவிமடுக்க மறுக்கும் தங்கள் கோரிக்கைகளோடு தலைநகரம் மும்பை நோக்கி கிட்டத்தட்ட 200 கி.மீ. தொலைவு நடந்தே பேரணியாக வந்த விவசாயத் தாயின் கிழிபட்ட பாதம். சுமார் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் நடந்துவந்த இந்தப் பேரணி மகாராஷ்டிர அரசைத் தாண்டியும் ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியது.
‘குறைந்தபட்சக் கொள்முதல் விலை’ கோரிக்கை தொடங்கி அவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் பலவும் நாடு முழுக்க உள்ள விவசாயிகள் பல்லாண்டு காலமாகத் தொடர்ந்து வலியுறுத்திவருவது. ‘நிறைவேற்றுவோம்’ என்று வாக்குறுதி கொடுத்துத் திருப்பியனுப்பி இருக்கிறார்கள் ஆட்சியாளர்கள். வயிற்றுக்கு அன்னமிடும் அவர்கள் கால்கள் மீண்டும் சிதைபடக் கூடாது!