இஷ்டப்படி சாப்பிடலாம்...இஷ்டம் இருந்தால் காசு தரலாம்! கம்யூனிஸ்ட்களின் கட்டணமில்லா உணவகம்!

By காமதேனு

கேரள மாநிலம், ஆலப்புழாவிலிருந்து ‘சேர்த்தலா’ செல்லும் தேசிய நெடுஞ்சாலை அது. இந்த வழியே சொகுசுக் கார்களில் செல்வோர்கூட பாதிராப்பள்ளி வந்ததும் மறக்காமல் நின்று கை நனைத்துச் செல்கின்றனர். அழகுச் சீமையாம் ஆலப்புழாவின் இன்னொரு அடையாளமாகியுள்ளது அந்த உணவகம்!

வண்டியை நிறுத்தியதுமே சாப்பிட அழைக்கும் வசீகரிப்போடு நிற்கிறது அந்த உணவகம்.  முகப்பில், ‘ஜனகீய பட்சணசாலா’ (மக்கள் உணவகம்) என மலையாளத்தில் எழுதப்பட்டுள்ளது. வாசலைக் கடந்து உள்ளே சென்றால் இருக்கை வசதிகள் கொண்ட நீளமான அறை. அந்த அறை முழுவதும் கண்ணுக்கு விருந்தளிக்கும் காட்சி ஓவியங்கள் நம்மை வசீகரிக்கின்றன. 

இதைக் கடந்து உள்ளே சென்றால் சுகாதாரம் ததும்பும் ஆரோக்கிய உணவகம். பளபளக்கும் அதன் டைல்ஸ் தரையை  அடிக்கடி துடைத்து சுத்தம் செய்துகொண்டே இருக்கிறார்கள். அமர்ந்து சாப்பிடுவதற்கான அழகான இருக் கைகள் மற்றும் மேசைகளுடன் கீழும் மேலுமாய் இரு அடுக்குகளாக விரிகிறது உணவகம்.

இவ்வளவு விவரிக்கின்றீர்களே... அந்த உணவகத்தில் அப்படி என்ன விசேஷம் என்று கேட்கிறீர்களா..? இந்த உணவகமே விசேஷம் தான்.  உணவகங்களில் நாம் பார்த்துப் பழகிப் போன காசாளரோ, வந்தவர்களை  கவனிக்கும் சப்ளையர்களோ இங்கு இல்லை. மிரட்டும் விலைப்பட்டியலையும் இங்கே பார்க்க முடியாது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE