ரிஷிகேஷில் இருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் உள்ளது வசிஷ்தா (Vashistha Cave) குகை. இமயமலையில் ரஜினிகாந்த் விரும்பும் தியானக் குகை அதுதான்.
இம்முறையும் நீண்ட நேரம் அங்கே தியான வழிபாட்டில் ஈடுபட்டிருக்கிறார். ’நான் ஆன்மிகவாதியாக இங்கே வந்திருக்கிறேன். அரசியல் பேச வேண்டாம்.
இன்னும் நான் முழு நேர அரசியல்வாதி ஆகவில்லை’ என்று சொன்னதைப்போல, இந்தப் பயணத்தில் அவர் அதிகம் சன்யாசிகளை மட்டுமே சந்தித்துவருகிறார். அவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டினர்.