கடவுச் சொற்களையே களவாடினார்கள்?

By காமதேனு

சுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய வங்கி ஊழலாகியிருக்கிறது நீரவ் மோடி மோசடி. இதுவரை இந்த ஊழலைப் பற்றி ரிசர்வ் வங்கி நிர்வாகமோ, மத்திய நிதியமைச்சகமோ, பிரதமரோ இதுவரை மக்களிடம் முழுமையாக நேரடி விளக்கம் அளிக்கவில்லை. ஆனால்,ந் ஏதோ கீழ்நிலை அலுவலர்களால் இந்த ஊழல் நடந்துவிட்டது போன்ற ஒரு பாவனையை ஆளும் தரப்பு உருவாக்க முயன்றுவருகிறது.

ரூ. 11,360 கோடி அளவிற்கு ஊழல் நடந்ததாகச் சொல்லப்படும் இந்த ஊழலுக்கு உள்ளபடி யார் பொறுப்பு?

அடிப்படை பிரச்சினை என்ன?

வெளிநாட்டிலிருந்து வைரம் இறக்குமதி செய்வதற்கு அந்நாட்டில் உள்ள நம் நாட்டு வங்கிக் கிளையிடம் குறுகிய காலக் கடன் பெறுவதற்காக பஞ்சாப் நேஷனல் வங்கியின் பிராடி ஹவுஸ் (மும்பை) கிளையை அணுகி உறுதியளிப்புக் கடிதம் (LoU) கோரினார் நீரவ் மோடி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE