காவிரி என்பது வெறும் நீரல்ல!

By காமதேனு

காவிரிப் படுகைக்கு என்று ஒரு ரசனை. அங்கே சிருங்காரம் சற்றுத் தூக்கலாக இருக்கும். சங்க காலத்திலிருந்து மருத நிலத்தின் அடையாளமே அதுதானே! பேசும்போது சங்கதிகளை அசட்டுத்தனமாகப் பிட்டுவைக்காமல் தொட்டுத்தான் காட்டுவார்கள். தன்னையே குறியாகவைத்ததுபோல் பிறரையும் பேசும் கேலிப்பேச்சு உண்டு. முழுத் தத்துவமாக அது முற்றாவிட்டாலும் அங்கு ஒரு தத்துவமும் உண்டு. சட்டையைக் கழற்றி ஆணியில் மாட்டும் எளிமையில் உடம்பை உதறிவிட்டுப் போவார்கள். “இந்த ஆக்கையைச் சுட்டுப்போட்டால் என்ன?” என்று தன் உடம்பிலிருந்தே விலகி நின்று அதைச் சபித்துக்கொள்வார்கள்.

வயிற்றுக்கு மட்டுமே சோறிட்டு வளர்க்கவில்லை காவிரி. இப்படி ஒரு சிந்தனைக் கலாச்சாரத்தையும் வளர்த்திருந்தது. அது பண்பாட்டுப் படைப்புகளான இலக்கியத்துக்கும், கலைக்கும் ஊற்று. காவிரி சென்றுகொண்டிருக்கும் வறட்சிப் பாதையைப் பார்க்கையில் ஒரு அச்சம் ஏற்படுகிறது. தண்ணீரோடு சேர்த்து இவையெல்லாமும் காணாமல் போய்விடும்?

கலாச்சாரப் பிளவு

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE