தயாரிப்பாளரை அலறவிட்ட தைரியலட்சுமி

By காமதேனு

அழகு, நடிப்பு, நடனம், பாட்டு எனத் தனித் திறமைகளுக்காகவும், கூடவே தன் கோபத்துக்காகவும் அன்று புகழ்பெற்றிருந்தவர் வசுந்தரா தேவி. இந்தி, தமிழ்ப் படவுலகில் கனவுக்கன்னியாக வலம்வந்த வைஜெயந்திமாலாவின் அம்மா என்றால், இன்றைய தலைமுறைக்குச் சட்டென்று விளங்கும். 1939-ல் அறிமுகமாகி ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்று வளர்ந்துகொண்டிருந்தார் டி.ஆர்.ராஜகுமாரி.

ஆனால் தியாகராஜ பாகவதருடன் முதல் முறையாக அவர் ஜோடி சேர்ந்து நடித்த ‘சிவகவி’ படம் 1943-ல் வெளிவந்த பிறகுதான் அவருக்குக் கனவுக்கன்னி என்ற அரியாசனத்தை மக்கள் அளித்தனர். ஆனால், அதே 1943-ல் ஜெமினி ஸ்டுடியோ நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக வெளிவந்த ‘மங்கம்மா சபதம்’ என்ற ஒரே படத்தின் மூலம் டி.ஆர்.ராஜகுமாரிக்கு இணையான புகழைப் பெற்றார் வசுந்தரா தேவி. அதற்கு முன் அவர் 1941-ல்

வெளியான ‘ரிஷ்ய சிருங்கர்’ படத்தில் காட்டுக்குச் சென்றுவிட்ட முனிவர் ரிஷ்ய சிருங்கரைத் தன் அழகால் மயக்கி அழைத்துவரும் வேடம் மூலம், தமிழ் ரசிகர்களையும் மயக்கியிருந்தார். இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு வசுந்தரா மூன்றாவதாக ஒரு படத்தை ஒப்புக்கொண்டார். பட ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டு கால்ஷீட்டும் கொடுத்தாகிவிட்டது. ஆனால், என்ன நடந்ததோ, ‘குரல் சரியில்லை’ என்று காரணம் கூறி வசுந்தராவைப் படத்திலிருந்து நீக்கினார் தயாரிப்பாளர். கொதித்துப்போனார் வசுந்தரா தேவி.

உண்மையான காரணம் அந்தத் தயாரிப்பாளருக்கும் வசுந்தராவுக்கும் தெரியும் என்றாலும், உலகத்துக்கு எப்படி இவர் பொய்யான காரணத்தைக் கூறலாம். கொதித்துப்போன வசுந்தரா, தாம் வழக்கமாகப் பாடும் இசைத்தட்டு நிறுவனத்தின் ஸ்டுடியோவுக்குச் சென்று, அன்றே ஒரு பாடலைப் பாடிப் பதிவுசெய்தார். அதை ஆதாரமாக வைத்து, அன்றே தன் வழக்கறிஞரை வைத்துத் தயாரிப்பாளர் மீது வழக்குத் தொடுத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE