பொதுத்துறை வங்கிகள் மீதான சூறையாடல்

By காமதேனு

பொதுத்துறை வங்கிகள் மீதான சூறையாடல்!

வைர வியாபாரி நீரவ் மோடி அரங்கேற்றியிருக்கும் ரூ.11,600 கோடி வங்கி மோசடி , பொதுத்துறை வங்கிகள் மீதான சூறையாடலின் தொடக்கமாக மாறிவிட்டதோ என்று அஞ்சத் தோன்றுகிறது.

அரசியல் பின்னணியில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கண்மூடித்தனமாகக் கடன்களை வாரி வழங்கிவிட்டு இப்போது அவற்றைத் திருப்பி வாங்க முடியாமல் விழி பிதுங்கி நிற்கின்றன வங்கிகள். கடன் தருவதிலும் பணியாளர்களைக் கண்காணிப்பதிலும் விதிமுறைகள் மீறப்படுவது, நிர்வாக ஓட்டைகள் ஆகியவற்றை இந்த விவகாரம் அம்பலப்படுத்தியுள்ளது. இது பஞ்சாப் நேஷனல் வங்கியின் பிரச்சினை மட்டுமல்ல, இந்திய பொதுத் துறை வங்கிகளைப் பீடித்திருக்கும் உயிர்க்கொல்லி நோயின் அறிகுறி.

2012-லிருந்து 2016 வரை மட்டும் ரூ.23,743 கோடியை இதுபோன்ற வங்கி மோசடிகளால் பொதுத் துறை வங்கிகள் இழந்திருப்பது பெங்களூரு இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் (ஐ.ஐ.எம்) நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE