மேன்மையை நோக்கிப் பார்வையை உயர்த்துவோம்!

By காமதேனு

அரை நூற்றாண்டு காலம் இந்திய திரை ரசிகர்களின் வாழ்வோடு பிணைந்திருந்த நட்சத்திரம் ஸ்ரீதேவி. நாட்டின் தென்கோடியைச் சேர்ந்த ஒரு குக்கிராமத்திலிருந்து சென்று இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் ஆனவர்.

இந்தியாவின் மூன்று பெரிய திரைத் துறைகளான இந்தி, தெலுங்கு, தமிழ் மூன்று மொழித் திரைப்படங்களிலும் கோலோச்சியவர். வாழும் காலம் நெடுகிலும் கொண்டாடப்பட்டவர். சட்டென்று நிகழ்ந்த அவரது விடைபெறல் யாராலும் ஏற்க முடியாததாகப் போய்விட்டது.

மிகச் சிறந்த அஞ்சலியை நாம் அவருக்குச் செலுத்திருக்க வேண்டும். மக்கள் மிக மேன்மையாக நடந்துகொண்டார்கள். ஆனால், அவருடைய இழப்பு ஏற்படுத்திய சோக அலையையும் விஞ்சும் அதிர்ச்சி அலையை ஊடகத் துறையினர் உருவாக்கிவிட்டார்கள்.

ஊடகத் துறையை ஆட்டிப் படைக்கும் மோசமான பரபரப்புக் கலாச்சாரமே முக்கியமான காரணம். ஒரு குற்றத்திலுள்ள மர்மத்தை வெளிக்கொணரும் பரபரப்போடு இந்தச் செய்தியை ஊடகங்கள் அணுகிய விதம் வெட்கக்கேடானது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE