நடிகர் விக்ரமின் ‘தங்கலான்’ படம் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?

By KU BUREAU

சென்னை: நடிகர் விக்ரமின் ‘தங்கலான்’ படம் ஓடிடியில் வெளியாகும் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்டப் பலர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வெளியான படம் ‘தங்கலான்’. இரஞ்சித்தின் படங்களில் வழக்கமாக இடம்பெறும் நில அரசியல், சாதிய பாகுபாடு போன்ற விஷயங்களை இந்தப் படமும் பேசியிருந்தது. ஆனாலும் கலவையான விமர்சனங்களை இந்தப் படம் பெற்றது. பாக்ஸ் ஆஃபிஸில் ரூ. 100 கோடிக்கும் அதிக வசூலைப் பெற்ற இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த மாதம் 20ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. ஓடிடி உரிமையை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் ரூ. 35 கோடிக்கு வாங்கி இருப்பதாகவும் தெரிகிறது. இந்தப் படத்தின் வெற்றி விழாவில் ‘தங்கலான்2’ உருவாக வாய்ப்பிருப்பதாகவும் விக்ரம் சொல்லி இருந்தார். இந்தப் படத்தை அடுத்து ‘வீர தீர சூரன்’ படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார் விக்ரம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE