சென்னை: கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘தாத்தா வராரு’ என்ற கேப்ஷனுடன் நெட்ஃப்ளிக்ஸ் இதனை அறிவித்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1996-ம் ஆண்டு வெளியான பிரம்மாண்ட படம், ‘இந்தியன்’. அதில் சுகன்யா, மனீஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். இதன் அடுத்த பாகம் ‘இந்தியன் 2’ என்ற பெயரில் உருவானது. இதில், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படம் கடந்த ஜூலை 12-ம் தேதி பான் இந்தியா முறையில் திரையரங்குகளில் வெளியானது. ஆனால், சுவாரஸ்யமில்லாத திரைக்கதையாலும், ரீபிடட் காட்சிகளாலும் படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இது பாக்ஸ் ஆஃபீஸ் வசூலிலும் எதிரொலித்தது. மேலும் ‘இந்தியன்’ சீரிஸின் 3வது பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ‘இந்தியன் 2’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது. ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் படத்தை தமிழ் தவிர்த்து இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளில் காணலாம்.
» வடமாநில தொழிலாளர்களின் வாழ்க்கையை பேசும் ‘ரயில்’: ஆகஸ்ட் 2-ல் ஓடிடியில் ரிலீஸ்
» மம்மூட்டி, ராஜ் பி ஷெட்டியின் ‘டர்போ’ - ஆகஸ்ட் 9-ம் தேதி ஓடிடியில் வெளியீடு!