சத்யராஜ், வசந்த் ரவியின் ‘வெப்பன்’ வெள்ளிக்கிழமை ஓடிடியில் ரிலீஸ்!

By KU BUREAU

சென்னை: சத்யராஜ், வசந்த் ரவி நடித்துள்ள ‘வெப்பன்’ திரைப்படம் வெள்ளிக்கிழமை ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சத்யராஜ் நடித்துள்ள சயின்ஸ் பிக்‌ஷன் படம் ‘வெப்பன்’. இதில், வசந்த் ரவி, ராஜீவ் மேனன், தன்யா ஹோப், ராஜீவ் பிள்ளை, யாஷிகா ஆனந்த், மைம் கோபி, கனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மில்லியன் ஸ்டூடியோ புரொடக் ஷன்ஸ் சார்பில் எம்.எஸ்.மன்சூர் தயாரித்துள்ள இந்தப் படத்தை குகன் சென்னியப்பன் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சூப்பர் ஹ்யூமன் விஷயத்தை அடிப்படையாகக் கொண்டு சயின்ஸ் பிக் ஷன் ஆக்ஷன் த்ரில்லராக இந்தப் படம் உருவானது. கடந்த ஜூன் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் படம் வரும் ஜூலை 26-ம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE