விஜய் சேதுபதி நடிக்கும் வெப் தொடரின் டைட்டில் அறிவிப்பு!

By காமதேனு

நடிகை சமந்தா நடித்த 'தி ஃபேமிலிமேன்’ என்ற வெப் தொடருக்கு இயக்குநர்கள் பாரதிராஜா, சீமான், அமீர் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த தொடரை ராஜ்&டிகே என்பவர் இயக்கினார். இவர் இயக்கத்தில் உருவாகும் புதிய தொடரில் விஜய்சேதுபதி நடிக்க உள்ளார் என்ற செய்தி ஏற்கெனவே தெரிந்ததுதான்.

தற்போது, இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ராஜ்&டிகே இயக்கத்தில் உருவாகும் இந்த தொடருக்கு ‘ஃபர்ஜி’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் காவல்துறை அதிகாரியாகவும் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரிலும் நடிக்கின்றனர்.

இந்த தொடரில் மேலும் ராஷிகண்ணா, ரெஜினா, கே.கே.மேனன், அமோல் பலேகர் உள்பட பலர் நடிக்கின்றனர். இந்த தொடர் விரைவில் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாக போகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE