வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் நவ.25 அன்று நேரடியாகத் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் மாநாடு.
தீபாவளிக்கு அறிவிக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம், ரஜினியின் அண்ணாத்த காரணமாக போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை என தள்ளிப்போய் வெளியானது. ஆனபோதும் அறிவியல் புனைவு கலந்த திரில்லர் கதை, சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு காரணமாக ரசிகர்கள் மத்தியில் எதிர்பாரா வரவேற்பைப் பெற்றது. இயக்குநர், நடிகர்கள் என பலருக்கும் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வெற்றிப்படமானது.
திரையரங்குகளில் வெளியான ஒரே மாதத்தில் ஓடிடி வெளியீட்டுக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முடிவு செய்தார். இதற்கு சிம்பு தரப்பில் அதிருப்தி எழுந்தது. சிம்புவின் தந்தை விஜய டி.ராஜேந்தர் தன் பாணியில் பொங்கினார். ஆனபோதும், டிச.24 அன்று சோனி லிவ் தளத்தில் மாநாடு திரைப்படம் வெளியானது. வெளியாகி ஒரு வார காலமாக இங்கேயும் முன்னணி பெற்றிருக்கிறது. கடந்த வாரம் நேரடியாக ஓடிடியில் வெளியான மின்னல் முரளி, அட்ராங்கி ரே திரைப்படங்களுக்கு இணையாக மாநாடும் முதன்மை பெற்றிருக்கிறது.