தென்காசி: மூதாட்டி உடலை தகனம் செய்த இஸ்லாமிய பெண்கள்

By KU BUREAU

தென்காசி மாவட்டம் குற்றாலம் குடியிருப்பு பகுதியில் பசியில்லா தமிழகம் அறக்கட்டளை மூலம் பெண்களால் பெண்களுக்காக நடத்தப்படும் ஆதரவற்ற முதியவர்களுக்கான அன்னை பாத்திமா அலி அன்பு இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த அன்பு இல்லத்தில் ஆதரவற்ற பெண்கள் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த 2024ம் ஆண்டு ஜூன் 11ம் தேதி அன்று தென்காசி மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் மூலம், செங்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் கே.எஸ்.பாலமுருகன் அனுமதியுடன் மகமாயி என்ற உடல்நிலை பாதிக்கப்பட்ட மூதாட்டி இந்த இல்லத்தில் சேர்க்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில், உடல்நிலை பாதிப்பால் மகமாயி உயிரிழந்தார்.

இதையடுத்து, அவரது உறவினர்கள் வரவழைக்கப்பட்டு, அனைத்து இறுதிச் சடங்குகளும் செய்து, அவரது உடல் தென்காசி எரிவாயு தகன மேடையில் தகனம் செய்யப்பட்டது. இல்லத்தைச் சேர்ந்த ஜமீமா ஜின்னா, செய்யது அலி பாத்திமா உள்ளிட்டோர் மூதாட்டி உடலை தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர். அவர்களுக்கு மூதாட்டியின் உறவினர்கள் நன்றி தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE