நம்மில் பலருக்கும் சில வேளைகளில் களைப்பு (Fatigue) ஏற்படுவதுண்டு. இதைத் தடுக்கும் எளிய வழிகளை கூறுகின்றனர் பொதுநல மருத்துவர்கள்.
அவை: அலுவலகத்திலும் வீட்டிலும் நீங்கள் அதிக நேரம் இருக்கிற இடத்தில் நல்ல காற்றோட்டம் இருக்க வேண்டும். மாசில்லாத காற்றைச் சுவாசிக்க வேண்டும்.
> தினமும் குறைந்தது ஆறு மணி நேரம் எவ்வித இடையூறும் இல்லாமல் தூங்க வேண்டும். முடியாதவர்கள் வார இறுதி நாட்களிலாவது ஓய்வு எடுக்க வேண்டும்.
> உடல் பருமனாக இருந்தால் உடல் எடையைக் குறைக்க வேண்டும்.
» நாட்றம்பள்ளி அருகே கி.பி.15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரர்கள் நடுகல் கண்டெடுப்பு
» சென்னை பொது அஞ்சலகத்தின் நிரந்தர ஓவிய அஞ்சல் முத்திரை வெளியீடு
> சமச்சீரான இந்தியப் பாரம்பரிய உணவு வகைகளைச் சாப்பிடுவது நன்மை பயக்கும். காய்கறி, பழங்களைத் தேவையான அளவுக்குச் சாப்பிடுங்கள்.
> மேற்கத்திய உணவு வகைகளையும் அதிக எண்ணெய் உள்ள, கொழுப்புள்ள உணவு வகைகளையும் குறைத்துக்கொள்ளுங்கள்.
> தினமும் காலையில் நடைப் பயிற்சி அல்லது உடற்பயிற்சி ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும். முடிந்தால் மாலையில் யோகாசனம் செய்யலாம்.
> வேலைகளை முறைப்படுத்திச் செய்யுங்கள். நன்கு திட்டமிட்டு, நேர மேலாண்மையைப் பின்பற்றி, நிதானமாகச் செய்யவேண்டியதும் முக்கியம்.
> தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். ஏசி அறைகளில் பணிபுரிவோருக்கு நீரிழப்பு ஏற்படுவது வெளியில் தெரியாது. அவர்களும் தேவைக்கு ஏற்பத் தண்ணீர் அருந்தவேண்டும்.
> காபி, தேநீர், கோலா மற்றும் குளிர்பானங்கள் குடிப்பதைக் குறைத்துக்கொள்ளுங்கள். புகைப் பிடிப்பதைத் தவிர்த்துவிடுங்கள். மது அருந்த வேண்டாம்.
> மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எந்த மருந்தையும் சாப்பிடாதீர்கள்.
இவற்றை இயன்றவரைப் பின்பற்றினால், களைப்பு (Fatigue) பிரச்சினை அகலும் என்கின்றனர் மருத்துவர்கள்.