கன்னியாகுமரியில் அடுத்த 3 நாட்களுக்கு படகு போக்குவரத்து 4 மணி நேரம் நீட்டிப்பு!

By KU BUREAU

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் பொங்கல் தொடர் விடுமுறை காரணமாக வரும் ஜனவரி 17ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு படகு போக்குவரத்து 4 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் கடல் நடுவே பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் உள்ளன.. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் படகில் சென்று பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 30ம் தேதி கண்ணாடி இழை பாலம் திறக்கப்பட்ட பின்னர் கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. விவேகானந்தர் பாறைக்கு சென்று வரும் வகையில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு போக்குவரத்து காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடத்தி வருகிறது.

இதற்காக பொதிகை, குகன்,விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கன்னியாகுமரியில் அலைமோதி வருகிறது. எனவே பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் இன்று முதல் 17ம் தேதி வரை மூன்று நாட்கள் படகு போக்குவரத்து நேரத்தை 4 மணி நேரம் கூடுதலாக நீட்டித்துள்ளது. அதன்படி மூன்று நாட்களும் படகு சேவை காலை 6 மணி முதல் மாலை 6 மணி நடைபெறவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE