திண்டிவனத்தில் நெகிழ்ச்சி: 35 ஆண்டுகளுக்கு பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு!

By எஸ்.நீலவண்ணன்

விழுப்புரம்: திண்டிவனம் அருகே ஆலகிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1988-89ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவ மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 90 பேர் கலந்து கொண்டனர். பள்ளியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தங்களின் முன்னாள் ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நினைவுப்பரிசு வழங்கினார்கள்.

மேலும் பள்ளிக்கு முன்னாள் மாணவர் ஜியாவுதீன் ஒரு புரொஜெக்டர் வழங்கினார். முன்னாள் மாணவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தமிழ்செல்வன் வடிவமைப்பு செய்த 10 மேஜை, நாற்காலிகளை வழங்கினர். இதனை தொடர்ந்து பள்ளியில் ஒரு மரக்கன்று நட்டுவைத்தனர்.

இந்நிகழ்வில் முன்னாள் மாணவர்கள் சக்திவேல், ஜ்வாலா மாலினி, அப்பாண்டைராஜ், ஆகியோர் பங்கேற்றனர். 35 ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்த முன்னாள் மாணவ மாணவிகள் அனைவரும் கலந்து பேசி மகிழ்ந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டு பிரிய மனமில்லாமல் பிரிந்து சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE