சென்னை: மோசமான வானிலை காரணமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 13 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னையில் இருந்து புறப்பட இருந்த 7 விமானங்கள், சென்னைக்கு வர இருந்த 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று வலுப்பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தற்போது உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று தமிழகத்தை நோக்கி நகர்வதால் டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப் பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று பகலில் தொடங்கி மாலை, இரவில் மழை தீவிரமடையும். இன்றும் நாளையும் சென்னையில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், காற்று, மழை உள்ளிட்ட மோசமான வானிலை காரணமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 13 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னையில் இருந்து புறப்பட இருந்த 7 விமானங்கள், சென்னைக்கு வர இருந்த 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
» மயிலாடுதுறை: கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
» தங்கம் விலை மீண்டும் உயர்வு: சவரனுக்கு ரூ.640 அதிகரித்தது!