கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்றைய காலை நேர விலை நிலவரப்படி மீண்டும் உயர்ந்து அதிர்ச்சியளித்தது.
சென்னையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.80 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.7,285க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.640 உயர்ந்து, ரூ.58,280க்கு விற்பனை செய்யப்பட்டு வரப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
நேற்று வெள்ளி கிராம் ஒன்றுக்கு ரூ.4 உயர்ந்த நிலையில் இன்று காலை நேர விலை நிலவரப்படி ஒரு கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.103க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,03,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.