குன்னூர் மலைப்பாதையை அலங்கரிக்கும் அதிசய தங்க மரத்தின் மஞ்சள் நிற மலர்கள்: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!

By KU BUREAU

குன்னூர்: குன்னூர் மலைப்பாதையில் அதிசய தங்க மரம் என அழைக்கப்படும் சென்னா ஸ்பெக்டபிலிஸ் மரத்தில் மஞ்சள் நிறத்தில் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. நீலகிரி மாவட்டத்தில் தற்போது இரண்டாவது சீசன் தொடங்கியுள்ள நிலையில், குன்னூர் பகுதிகளில் ரம்மியமான சூழல் நிலவுகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள் இங்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக, குன்னூர் மலைப்பாதையில் பசுமையான மலைகளுக்கு இடையே அதிசய தங்க மரம் என அழைக்கப்படும் சென்னா ஸ்பெக்டபிலிஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட மரங்களில், தற்போது மஞ்சள் நிறத்தில் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இதனால், தற்போது மலைப் பாதை முழுவதும் பசுமையான சூழலுடன், மலர்களால் வண்ணமயமாக காணப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகளும் ஆர்வமுடன் புகைப்படம், செல்ஃபி எடுத்து செல்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE