பிசினஸ் கிளாஸ் அறிமுகம் செய்யும் இண்டிகோ... 18 ஆண்டுகளில் இல்லாத பாய்ச்சல்

By காமதேனு

இந்தியாவில் பிரசித்தி பெற்ற இண்டிகோ விமான சேவை நிறுவனம், தனது வரலாற்றில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவையை தொடங்க உள்ளது.

முற்றிலும் எகானமி கிளாஸ் இருக்கைகளுடன் மட்டுமே இயங்கும் இண்டிகோ, தனது 18 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு பிசினஸ் கிளாஸ் அறிமுகத்தில் குதிக்கிறது. 360க்கும் மேற்பட்ட விமானங்களைக் கொண்டுள்ளதோடு, தினசரி தேசத்தின் குறுக்கும் நெடுக்குமாக சுமார் 2,000 விமானப் பயணங்களை இயக்கும் இண்டிகோ வரலாற்றில் இது முக்கிய நகர்வாகும்.

இண்டிகோ விமானத்தின் எகனாமி கிளாஸ்

தேசத்தில் அதிகரித்து வரும் பொருளாதார வளர்ச்சிக்கு மத்தியில், பயணிகளுக்கான கூடுதல் விருப்பங்களை நிறைவு செய்ய இண்டிகோ இந்த அடியெடுப்பை மேற்கொள்கிறாது. வழங்க கேரியர் முயல்கிறது. 18 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் வகையில் அறிமுகமாகும், பிசினஸ் கிளாஸ் சேவை ஆகஸ்டில் அடியெடுக்கிறது.

இந்தியாவின் லாபகரமான விமான சேவை நிறுவனமான இண்டிகோ, 30 பரந்த விமானங்களை வாங்குவதாக கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டதன் மத்தியில் பிசினஸ் கிளாஸ் குறித்தான அதன் அறிவிப்பு கவனம் பெற்றுள்ளது. "இந்தியாவில் வணிக பயணத்தை மறுவரையறை செய்வதற்கான ஒரு அற்புதமான நடவடிக்கையாக இது அமையும். இந்தியாவின் மிகவும் விருப்பத்துக்குரிய விமான நிறுவனமான இண்டிகோ, பிசினஸ் கிளாஸை பெருமையுடன் அறிமுகம் செய்கிறது” என இண்டிகோ நிறுவனத்தின் ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது.

இண்டிகோ விமானம்

தங்கள் நிறுவனத்தின் பரிணாம வளர்ச்சியில் அடுத்த படியை எடுக்க வேண்டிய நேரம் இது என்று வலியுறுத்திய இண்டிகோ, இந்தியாவின் எகிறும் பொருளாதாரம் மற்றும் இந்திய சமூகத்தின் வளர்ந்து வரும் அபிலாஷைகளை கருத்தில் கொண்டு, இந்தியாவில் பிரீமியம் பயணத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய நேரம் இது எனவும் பெருமிதம் தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

திருத்தணி முருகன் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திடீர் சாமி தரிசனம்... அடுத்த படத்துக்கான பணிகள் துவக்கமா?

வீடியோ காலில் எதற்கு பேசுற? மனைவியைக் கொலை செய்து புதைத்த கணவன்!

வங்கக்கடலில் 'ரெமல்' புயல்... 26ம் தேதி கரையைக் கடக்கும் என கணிப்பு!

அதிர்ச்சி வீடியோ... மருத்துவமனைக்குள் பாய்ந்த ஜீப்... அவசர சிகிச்சை பிரிவு வரை ஓட்டிச் சென்ற போலீஸார்!

மெக்சிகோவில் பிரச்சாரத்தில் மேடை சரிந்து விபத்து: 5 பேர் பலி; 50 பேர் படுகாயம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE