22 பயணிகளுக்கு தண்டுவட அறுவை சிகிச்சை... ஆகாயத்தில் குலுங்கிய சிங்கப்பூர் விமானத்தால் தொடரும் அவதி

By காமதேனு

22 பயணிகளுக்கு தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை, 6 பேருக்கு மூளைக்காயம், 13 பேருக்கு எலும்பு முறிவு என ஆகாயத்தில் குலுங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தால், அதில் பயணித்தவர்கள் மருத்துவமனையில் தீவிர சவால்களை எதிர்கொண்டுள்ளனர்.

நடுவானில் குலுங்கலுக்கு ஆளான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தின் பயணிகளில் பலருக்கு தண்டுவட அறுவைசிகிச்சை உட்பட தீவிரமான மருத்துவ பராமரிப்பு தேவைப்படுவதாக, அவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் பாங்காங் மருத்துவமனை இன்று தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்

செவ்வாயன்று லண்டனின் ஹீத்ரூ விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்குப் பறந்து கொண்டிருந்த, சிங்கப்பூர் ஏர்லைன்ஸை சேர்ந்த போயிங் 777 விமானம், அந்தமான் கடல் பரப்பை கடக்கையில் நடுவானில் திடீர் குலுங்கலுக்கு ஆளானது. இதில் விமானத்தினுள் இருந்த சீட் பெல்ட் அணியாத பயணிகள் இருக்கையிலிருந்து தூக்கி எறியப்பட்டதில் மொத்தம் 104 பேர் காயமடைந்தனர்.

இவர்களில் 20 பேர் தீவிர சிகிச்சையில் இன்னும் உள்ளனர். மேலும் 22 பேர் இதர சிகிச்சை மற்றும் மருத்துவ பராமரிப்பில் உள்ளனர். 73 வயது பிரிட்டிஷ் பயணி விமானத்திலேயே மாரடைப்பால் இறந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பயணிகளில் பெரும்பாலானோர் இன்னமும் தங்களுக்கு நேர்ந்த நடுவான் அதிர்ச்சியிலிருந்து மீளாது உள்ளனர்.

நடுவானில் விமானம் கொந்தளிப்புக்கு ஆவதன் சித்தரிப்பு

211 பயணிகள் மற்றும் 18 பணியாளர்களை ஏற்றிச் சென்ற விமானத்தை, சுமார் மூன்று நிமிடங்களில் 6,000 அடி இறக்கத்திற்கு தள்ளிய வானியல் கொந்தளிப்புக்கு என்ன காரணம் என்பது இன்னமும் தெளிவாக கண்டறியப்படவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 22 பேருக்கு தண்டுவடம் சேதம் அடைந்திருப்பதாகவும், 6 பேருக்கு மூளை காயங்கள், 13 பேருக்கு எலும்புகள் மற்றும் உள் உறுப்புகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

திருத்தணி முருகன் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திடீர் சாமி தரிசனம்... அடுத்த படத்துக்கான பணிகள் துவக்கமா?

வீடியோ காலில் எதற்கு பேசுற? மனைவியைக் கொலை செய்து புதைத்த கணவன்!

வங்கக்கடலில் 'ரெமல்' புயல்... 26ம் தேதி கரையைக் கடக்கும் என கணிப்பு!

அதிர்ச்சி வீடியோ... மருத்துவமனைக்குள் பாய்ந்த ஜீப்... அவசர சிகிச்சை பிரிவு வரை ஓட்டிச் சென்ற போலீஸார்!

மெக்சிகோவில் பிரச்சாரத்தில் மேடை சரிந்து விபத்து: 5 பேர் பலி; 50 பேர் படுகாயம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE