பாட்டி இந்திராவை அச்சு அசலாய் பிரதியெடுத்த பேத்தி பிரியங்கா... பிரச்சாரக் களத்தில் ஆச்சரிய சுவாரசியம்

By எஸ்.எஸ்.லெனின்

ஜார்க்கண்ட் தேர்தல் பிரச்சாரக் களத்தில் உள்ளூர் பெண்களுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி நடனமாடியது, அச்சு அசலாய் அவரது பாட்டியும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தியை நினைவூட்டியுள்ளது.

வாரிசு அரசியலுக்கு எதிரான கூப்பாடுகள் இந்தியாவில் எதிரொலித்தபோதும், அந்த வசீகரத்தை தவிர்க்க இயலாது வரவேற்போரும் இங்கே அதிகமுள்ளனர். அதிலும் ஜவஹர்லால் நேரு தொடங்கி ராகுல் காந்தி வரை ‘காந்தி - நேரு’ குடும்பத்துக்கு என அரசியலுக்கு அப்பாலும் தனி மரியாதை உண்டு. அந்த ஆலமரத்தின் தற்போதைய விழுதுகளில் ராகுல் - பிரியங்கா உடன்பிறப்புகள், நடப்பு மக்களவைத் தேர்தல் களத்தை கலக்கி வருகின்றனர்.

ராகுல் - பிரியங்கா

இவற்றின் மத்தியில் பிரியங்கா காந்தி இன்று சமூக ஊடகத்தில் பதிவிட்டிருக்கும் வீடியோ ஒன்று, இந்திரா காந்தியை நினைவூட்டி உள்ளது. ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் பிரியங்கா காந்தி இன்று பங்கேற்ற, பழங்குடி மக்கள் மற்றும் உள்ளூர் பெண்களுடனான பாரம்பரிய நாட்டுப்புற நடனம் இந்த வகையில் கவனம் ஈர்த்துள்ளது.

”இயற்கையை வணங்கி எல்லா வகையிலும் பாதுகாக்கும் பழங்குடியின மக்களின் கலாச்சாரம் தான் உலகின் சிறந்த கலாச்சாரம் என்று என் பாட்டி இந்திரா காந்தி கூறுவார். இன்று ராஞ்சியில் நாட்டுப்புற கலாச்சாரத்தின் பல வண்ணங்களை கண்டுகொண்டோம்" என்று அந்த பதிவில் பிரியங்கா காந்தி பதிவிட்டுள்ளார்.

அசப்பில் இந்திரா காந்தியை நினைவூட்டும் பிரியங்கா காந்தியின் இந்த வீடியோவையும், இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அவர் பழங்குடியினருடன் இணைந்து நடனமாடிய புகைப்படத்தையும் இணைத்து, பகிர்ந்தபடி இணையவாசிகள் சிலாகித்து வருகின்றனர். பிரியங்கா - இந்திரா இடையிலான இந்த ஒப்புமை, காங்கிரஸ் கட்சியினருக்கு அப்பாலும் பொதுவெளியில் அதிகம் கவனம் ஈர்த்துள்ளது.

இந்திரா - பிரியங்கா

இந்த மக்களவைத் தேர்தலில் பிரியங்கா காந்தியும் போட்டியிடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டார். உத்தரபிரதேசத்தின் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியும், ரேபரேயில் பிரியங்கா காந்தியும் போட்டியிடுவார்கள் என்றே அரசியல் கணிப்புகள் அதிகரித்திருந்தன. ஆனால் எவரும் எதிர்பாரா வகையில் அமேதியை துறந்த ராகுல் ரேபரேலியை தேர்ந்தெடுத்தார்.

நேரடி அரசியலில் போட்டியிடாதபோதும், பிரியங்காவின் பிரச்சார வலம் நடப்பு மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு சவாலாகி வருகிறது. அமேதியின் பாஜக வேட்பாளரான ஸ்மிருதி இரானி இந்த வகையில், ’எனக்குப் போட்டி பிரியங்கா காந்திதான்’ என பகிரங்கமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...
வங்கக்கடலில் புயல் சின்னம்... தேனி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொட்டப் போகிறது கனமழை!

சோகம்... போலீஸ்காரருடன் தூக்கில் தொங்கிய இளம்பெண்!

காதலித்ததால் ஆத்திரம்... தங்கையை கோடாரியால் வெட்டிக்கொலை செய்த அண்ணன்கள்

மதுரை எய்ம்ஸ் திட்ட மதிப்பு... ரூ.1,978 கோடியிலிருந்து ரூ.2,021 கோடிகளாக உயர்வு!

உயர் தொழில்நுட்பம் படித்த தமிழர்களைக் குறிவைக்கும் வெளிநாட்டு மோசடிக் கும்பல்... கலெக்டர் எச்சரிக்கை!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE