உத்தரப்பிரதேசம் அலிகர் நகரின் அரசு மருத்துவமனைகளில் கருத்தடை சிகிச்சை செய்துகொண்ட 82 பெண்களில் 81 பேர் மீண்டும் கருவுற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
ஆண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு சிகிச்சையில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை, உபியில் அலிகர் மாவட்டம் முதலிடத்தை பெற்றிருந்தது. இங்கு 2021-22 இல் 4,800, 2022-23 இல் 5,240 மற்றும் 2023-24 இல் 6,084 ஆண்கள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அதேசமயம், இம்மாவட்டத்தில் கருத்தடை சிகிச்சை செய்துகொண்ட பெண்களில் 99 சதவிகிதம் பேர் மீண்டும் குறிப்பிட்ட காலங்களுக்குள் கருவுறுவது வழக்கமாகவும் இருந்துள்ளது.
இப்பிரச்சனைகள் மீதான ஆலோசனை கூட்டம் அலிகர் அரசு தலைமை மருத்துவர் டாக்டர்.நீரஜ் தியாகி தலைமையில் அலிகரில் நடைபெற்றது. கடந்த 2010 முதல் 2023 ஆம் ஆண்டுகள் வரையில் 82 பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. அரசு மருத்துவமனைகளில் நடந்த இச்சிகிச்சைகளில் 81 பெண்கள் மீண்டும் கருவுற்றது தெரியவந்துள்ளது. இதன் மீதான மருத்துவ அறிக்கை குடும்பக் கட்டுபாடு திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது. இந்த 81 பெண்களுக்கும் அரசு உதவித்தொகைகளும் அளிக்கப்படுகின்றன.
இதுபோல், குடும்பக் கட்டுபாடு சிகிச்சை செய்த பின்பும் கருவுறும் பெண்களுக்கு தலா ரூ.60,000 அளிக்கப்படுகிறது. இவற்றில் ரூ.30,000 உபி அரசாலும், மீதம் மத்திய அரசின் மருத்துவநலத் திட்டத்திலும் அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சையில் பெண்கள் உயிர் நீத்தால், ரூ.2 லட்சமும் அளிக்கப்படுகிறது.
இதையும் வாசிக்கலாமே...
உருவாகிறது ரஜினிகாந்த் பயோபிக்... தனுஷின் ஆசை நிறைவேறுமா?
நடிகை ஸ்ரீதேவியுடன் புகைபிடிக்கும் ராம்கோபால் வர்மா... மார்ஃபிங் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!
பெட்ரோல் பங்க் ஊழியரை முகம் சுளிக்க வைத்த பெண்... வைரலாகும் வீடியோ!
காதல் விவகாரத்தில் விபரீதம்... 4-வது மாடியில் இருந்து கீழே குதித்து கல்லூரி மாணவி தற்கொலை!
கோவிஷீல்ட் தடுப்பூசியால் மகள் மரணம்; சீரம் இன்ஸ்டிடியூட் மீது பெற்றோர் வழக்குப்பதிவு!