மது மற்றும் இரவு விடுதிகளுக்கு வரி குறைப்பு... சுற்றுலாப் பயணிகளை இழுக்க தாய்லாந்து தடாலடி!

By காமதேனு

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை மேலும் உயர்த்தும் நோக்கில், மது மற்றும் இரவு விடுதிகளுக்கான வரிகளை அடித்து நொறுக்கியுள்ளது தாய்லாந்து தேசம்.

தாய்லாந்து தேசத்தின் வருமான ஆதாயங்களில் பிரதானமானது சுற்றுலா. இயற்கை அழகு கொஞ்சும் தாய்லாந்து தேசத்தில் விடுமுறையை கழிக்க உலகெங்கும் இருந்து சுற்றுலாப் பயணிகள் குவிவது வழக்கம். சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் நோக்கில் தங்குமிடங்கள், பொழுதுபோக்குமிடங்கள், கேளிக்கை மையங்கள் உள்ளிட்டவற்றை ஏகமாய் தாய்லாந்து உருவாக்கி வைத்துள்ளது. அதிலும் தாய்லாந்தின் வனப்பு மிக்க பெண்களை மையமாகக் கொண்ட பாலியல் தொழிலும் உலகளவில் பிரசித்தி பெற்றது.

இயற்கை எழில் கொஞ்சும் தாய்லாந்து

ஆனால் இவையனைத்தையும் கொரோனா காலம் உருக்குலைத்துப் போட்டது. பெருந்தொற்றுப் பரவலுக்கு அஞ்சி உலகம் வீடடைந்து கொண்டதில், தாய்லாந்து தேசத்தில் சுற்றுலாவை நம்பியிருந்த தொழில்கள் அனைத்தும் நொடித்துப் போயின. கொரோனா தாக்கம் குறைந்து, உலகம் இயல்புக்கு திரும்ப ஆரம்பித்த பிறகும், விட்ட இடத்தில் வருமானத்தை பிடிக்க முடியாது தாய்லாந்து தவித்து வந்தது. எனவே அரசு தரப்பில் அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முடிவானது.

அதன்படி 2023-ல் தொடங்கப்பட்ட பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்கள் வாயிலாக சுற்றுலாப் பயணிகள் வருகை கணிசமாக அறிவித்தது. இதற்காக விருந்தோம்பலில் தொடங்கி, பொழுதுபோக்கும் மற்றும் இரவு கேளிக்கை மையங்களின் திறப்பு நேரத்தை வெகுவாக அதிகரித்தது. ஆண்டின் முடிவில் தாய்லாந்துக்கு வருகை தந்தோர் எண்ணிக்கை 28 மில்லியனைக் கடந்தது உறுதியானதும் தாய்லாந்து உற்சாகமானது. இதன் தொடர்ச்சியாக பிறந்திருக்கும் 2024-ம் ஆண்டில், சுற்றுலாப் பயணிகளை கூடுதலாக ஈர்க்க புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

தாய்லாந்து இரவு வாழ்க்கை

இதன்படி சுற்றுலாவாசிகளை கிட்டத்தட்ட மதுவால் குளிப்பாட்ட முடிவானது. உள்நாட்டில் தயாராகும் தாய்லாந்து ஒயின் உள்ளிட்ட உள்ளூர் ரகங்கள் மீதான வரிவிதிப்பை 10% என்பதிலிருந்து, 5% என்பதாக குறைத்து அறிவித்தது. ஆல்கஹால் விகிதம் அதிகமான இதர மது ரகங்கள் மீதான வரி விதிப்பை 10% என்பதிலிருந்து பூஜ்ஜியமாக்கி உள்ளது. இவற்றுக்கு அப்பால் தாய்லாந்தின் தனி ஈர்ப்பான இரவு விடுதிகள் மீதான வரி விதிப்பையும் குறைத்து அறிவித்துள்ளது. மது, மாது என வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தூண்டில் போடும் தாய்லாந்து இதன் மூலமாக கூடுதல் வருமானத்தை குவிக்க இருக்கிறது.

இதையும் வாசிக்கலாமே...


பொங்கல் பரிசு தொகுப்போடு ரூ.3000 வழங்க வேண்டும் - அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை!

கார் மோதியதில் கால்கள் துண்டான தந்தை... உடல் நசுங்கி 10ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு!

கோடிகளைக் கொட்டி பிரம்மாண்ட பங்களா... பாலிவுட்டை கலக்கும் வில்லன் நடிகர்!

வலுப்பெறும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி... 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு!

நிலநடுக்கத்தால் உருக்குலைந்த ஜப்பான்... உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆக உயர்வு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE