“இவங்க கிட்டயா நியாயத்துக்கு போகணும்?” வைரமுத்து விவகாரத்தில் மீண்டும் விரக்தி வெளிப்படுத்திய சின்மயி

By காமதேனு

கவிஞர் வைரமுத்துக்கு எதிரான தொடர் போராட்டத்தில் மற்றுமொருமுறை தனது விரக்தி மற்றும் ஆதங்கத்தை பாடகி சின்மயி வெளிப்படுத்தி உள்ளார்.

கவிஞர் வைரமுத்துக்கு எதிராக பாடகி சின்மயி ’மீடூ’ குற்றச்சாட்டினை எழுப்பி 5 ஆண்டுகளாகிறது. அப்போது தொடங்கி வைரமுத்து தொடர்பாக பொதுவெளியில் தொடர்ந்து சின்மயி எதிர்வினையாற்றி வருகிறார். மேலும், பெண் உரிமை சார்ந்தும், பாலியல் அத்துமீறல்கள் குறித்தும் கண்டனக் குரல்களை எழுப்பிய வகையிலும் தொடர்ந்து சின்மயி கவனம் பெற்று வருகிறார். ஒத்த கருத்துள்ளவர்களை ஒருங்கிணைத்தும் சமூக ஊடக தளங்களில் சின்மயி குரல் எழுப்பி வருகிறார்.

பாடகி சின்மயி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய முன்னாள் அமைச்சர் பி.சிதம்பரம், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்பில், கவிஞர் வைரமுத்து எழுதிய ’மகா கவிதை’ என்ற தலைப்பிலான நூலின் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழா மேடையை முன்வைத்தும், வைரமுத்துக்கு எதிரான தனது கண்டனத்தை சின்மயி தொடர்ந்துள்ளார்.

"தமிழகத்தின் மிகவும் சக்தி வாய்ந்த மனிதர்கள் என்னை இம்சித்தவரை மேடையேற்றுகின்றனர். இதுபோன்று பாலியல் குற்றவாளிகளை ஊக்குவிக்கும் மற்றும் ஆதரிக்கும் சூழல் தொடர்ந்தால், நேர்மையாக குரல் எழுப்புவோரும் முடங்கிப் போவார்கள். நான் விரும்பியது நிறைவேறும் வரை என்னால் பிரார்த்தனை செய்வது தவிர்த்து வேறு எதுவும் செய்ய முடியாது” என்று தனது எக்ஸ் பதிவில் சின்மயி விரக்தி வெளியிட்டுள்ளார்.

இதே போன்று தன்னை பின்தொடரும் நலம் விரும்பி ஒருவர் எழுப்பியிருக்கும் கேள்விக்கும் விரக்தி மேலிட பதில் தந்துள்ளார். ”நீங்கள் ஏன் பெண் பாலியல் குற்றங்களுக்கு எதிராக ஒரு அமைப்பு தொடங்கக்கூடாது” என்று அந்த ஃபாலோயர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்திருக்கும் சின்மயி, “தொடங்கி? எவங்ககிட்ட நியாயத்துக்கு போகணும்? இவங்க கிட்டயா? வைரமுத்து உடன் மட்டும் எத்தனை அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் என்று பாருங்கள். இம்மாதிரியான சூழலில் எப்படி நியாயம் கிட்டும்? என எதிர்கேள்வி வினவியுள்ளார்.

அது தொடர்பான பதிவில் வைரமுத்து விழா புகைப்படங்கள் மட்டுமன்றி, பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான இந்திய மல்யுத்த சம்மேளத்தின் முன்னாள் தலைவர் மற்றும் பாஜக எம்பியான பிரிஜ் கிஷன் புகைப்படத்தையும் சின்மயி இணைத்துள்ளார். இதன்மூலம் கட்சி, இயக்கம் என எந்தொவொரு சார்பும் இன்றி மீடூ புகார்களுக்கு ஆளாகும் விஐபிக்களுக்கு எதிராக தொடர்ந்து தான் பொதுவெளியில் கேள்வி எழுப்புவதை உறுதி செய்திருக்கிறார் பாடகி சின்மயி.

இதையும் வாசிக்கலாமே...


திமுக அமைச்சர்கள் மீதான வழக்குகள்... இன்று முதல் விசாரிக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

11 மணி நேர போராட்டம்... ஆழ்துளையில் விழுந்த குழந்தை உயிருடன் மீட்பு; சிகிச்சை பலனின்றி பலியான சோகம்!

இந்தியாவில் ஒரே மாதத்தில் 71 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்

அதிரடி! ரூ.806 கோடி ஜிஎஸ்டி பாக்கி தொகையை செலுத்த எல்ஐசிக்கு நோட்டீஸ்!

61 உயிர்களை பலிவாங்கிய முகலிவாக்கம் வழக்கு: 7 ஆண்டுகளுக்கு பிறகு இன்று விசாரணை!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE