இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்தது... மக்கள் நிம்மதி!

By காமதேனு

கடந்த சில வாரங்களாகவே இந்தியாவில் கொரோனா பரவல் கிடுகிடுவென உயர்ந்து வந்த நிலையில், தற்போது பரவல் சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி 2020ம் ஆண்டுமுதல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான பொதுமுடக்கம், ஊரடங்கு, கொரோனா கட்டுப்பாடுகள், தனிநபர் இடைவெளி, முகக்கவசம், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

கொரோனா பரிசோதனை

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்து வந்த நிலையில் திடீரென JN1 என்ற புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து பரவல் கடந்த சில நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து வருவதை அடுத்து வைரஸ் பரவலை தடுக்க அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது. நேற்று முன்தினம் 841 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 636 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரானா பாதிப்பு சற்று குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் இன்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரிசோதனை தீவிரம்

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 50 லட்சத்து 13 ஆயிரத்தை தாண்டியது. இதுவரை 4 கோடியே 44 லட்சத்து 75 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 309-ல் இருந்து 4 ஆயிரத்து 394 ஆக அதிகரித்தது. கொரோனாவுக்கு நேற்று முன்தினம் 3 பேர் உயிரிழந்ததை அடுத்து மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 33 ஆயிரத்து 364 ஆக உயர்ந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 15 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், சென்னை மாவட்டத்தில் 10 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 3 பேருக்கும், கோவை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


திமுக அமைச்சர்கள் மீதான வழக்குகள்... இன்று முதல் விசாரிக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

11 மணி நேர போராட்டம்... ஆழ்துளையில் விழுந்த குழந்தை உயிருடன் மீட்பு; சிகிச்சை பலனின்றி பலியான சோகம்!

இந்தியாவில் ஒரே மாதத்தில் 71 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்

அதிரடி! ரூ.806 கோடி ஜிஎஸ்டி பாக்கி தொகையை செலுத்த எல்ஐசிக்கு நோட்டீஸ்!

61 உயிர்களை பலிவாங்கிய முகலிவாக்கம் வழக்கு: 7 ஆண்டுகளுக்கு பிறகு இன்று விசாரணை!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE