நகைப்பிரியர்கள் `ஷாக்’... ஆண்டின் தொடக்கத்தில் விலை உயர்ந்த தங்கம்!

By காமதேனு

தங்கம் சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. ஆண்டின் தொடக்கம் என்பதால் விலை குறைந்து விற்பனையாகும் என எதிர்பார்த்த நகைப்பிரியர்களுக்கு ஷாக் அளிக்கும் வகையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

தங்கம்

பொருளாதார ரீதியாக இந்த மந்தமான நிலையே ஏற்படும் என்பதால், அடுத்து வரக்கூடிய நாட்களில் தங்கத்தின் விலை கடுமையாக அதிகரிக்கக் கூடும் என பொருளாதார வல்லுநர்கள் ஆண்டின் தொடக்கத்திலேயே கூறினர். அதன்படி இன்று தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலையில் எந்தவிதமான மாற்றமும் இன்றி விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்துள்ளது. நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,910 ரூபாயாகவும், ஒரு சவரன் 47,280 ரூபாயாகவும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் 5,920 ரூபாயாகவும், சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 47,360 ரூபாயாகவும் விற்பனையாகிறது.

அதேபோல 24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து, 6,390 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து, 51,120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி

தங்கம் விலை உயர்ந்து விற்பனையாகி வரும் நிலையில், வெள்ளி கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்துள்ளது. கிராம் வெள்ளி 80.30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி 80,300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...


திமுக அமைச்சர்கள் மீதான வழக்குகள்... இன்று முதல் விசாரிக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

11 மணி நேர போராட்டம்... ஆழ்துளையில் விழுந்த குழந்தை உயிருடன் மீட்பு; சிகிச்சை பலனின்றி பலியான சோகம்!

இந்தியாவில் ஒரே மாதத்தில் 71 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்

அதிரடி! ரூ.806 கோடி ஜிஎஸ்டி பாக்கி தொகையை செலுத்த எல்ஐசிக்கு நோட்டீஸ்!

61 உயிர்களை பலிவாங்கிய முகலிவாக்கம் வழக்கு: 7 ஆண்டுகளுக்கு பிறகு இன்று விசாரணை!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE