திறக்கப்படும் காவிரி நீரின் அளவு குறைப்பு... டெல்டா விவசாயிகள் அதிர்ச்சி!

By காமதேனு

கே.ஆர்.எஸ் (கிருஷ்ணராஜசாகர்) அணையிலிருந்து திறக்கப்படும் காவிரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால், தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு 3176 கன அடியாக குறைந்துள்ளது.

தமிழகத்தில் நாள்தோறும், கர்நாடக அணைகளில் இருந்து 5 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இதைக் கண்டித்து, கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே நேற்று மீண்டும் கூடிய ஆணையம், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் நேற்று வரை 3848 கன அடி நீர், கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் திடீரென இன்று காலை முதல் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

கபினி அணை

நேற்று வரை 2848 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று காலை முதல் 2176 கன அடி நீர் மட்டும் திறக்கப்பட்டு வருகிறது. கபினி அணையிலிருந்து 1000 கன அடி நீர் திறக்கப்படும் நிலையில், தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு 3848 கன அடியிலிருந்து 3176 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே காவிரி ஆணையம் உத்தரவிட்ட அளவை விட மிகவும் குறைவான அளவிலேயே நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், அந்த அளவும் குறைக்கப்பட்டுள்ளது, டெல்டா விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

மகாளய பட்சம் : இன்று முதல் அடுத்த 15 நாட்களை மிஸ் பண்ணாதீங்க... பித்ரு தோஷம் நீங்க சிறந்த வழிபாடு!

புரட்டாசி சனிக்கிழமை: பெருமாளை இப்படி தரிசித்தால் தரித்திரம் விலகும்’; செல்வம் சேரும்!

நாளை தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள்!

சென்னையில் அதிர்ச்சி... பெட்ரோல் பங்க் மேற்கூரை விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

காதல் கணவர் வேண்டும்! வீட்டின் முன்பு 35 நாட்களாக மனைவி தர்ணா!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE