காவிரியில் 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கவேண்டும்... மேலாண்மை ஆணையம் உத்தரவு!

By காமதேனு

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே காவிரி பிரச்சனை விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில், டெல்லியில் இன்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் நடைபெற்றது. இதில், அக்டோபர் 15 ம் தேதி வரை தமிழகத்திற்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டும் என்று கர்நாடகாவுக்கு காவிரி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி நீரை ஒரு சொட்டுகூட தமிழ்நாட்டுக்கு திறந்துவிட மாட்டோம் என்று கன்னட அமைப்புகள் கூறிவருகின்றன. கர்நாடகாவில் மழை இல்லை. அணைகளில் தண்ணீர் இல்லை என்று காரணங்களை சொல்லி முழு அடைப்பு போராட்டங்களையும் நடத்தி வருகிறார்கள். இதனிடையே 2 நாளைக்கு முன்பு, காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் நடந்தது. இதில் தமிழகத்துக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீரை அடுத்த மாதம் 15ம் தேதி வரை கர்நாடகா திறக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது. இது கர்நாடகாவுக்கு மேலும் சிக்கலை உருவாக்கியதால், இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலொ மனு செய்ய முடிவு செய்துள்ளது.

கர்நாடகா பந்த்

இத்தகைய சூழலில், இன்று டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா புதுச்சேரி அதிகாரிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் தமிழகம் கர்நாடக அதிகாரிகள் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. தொடர்ந்து கூட்டத்தின் முடிவில் காவிரி ஒழுங்காற்று அளித்த பரிந்துரையின் படி 3 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வரும் அக்டோபர் 15ம் தேதி வரை 3 ஆயிரம் கன அடி நீரை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பரபரப்பு... முதல்வர் ஸ்டாலினிடம் நேரிடையாகவே ரூ.1000 உரிமைத் தொகை கேட்ட பெண்கள்!

சென்னையில் பரபரப்பு... அடுத்தடுத்து மயங்கி விழுந்த 17 ஆசிரியர்கள்!

அதிர்ச்சி... முதல்வரின் வீடு மீது தாக்குதல் முயற்சி; துப்பாக்கிச் சூடு!

இளைய மகளுடன் திரைப்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி!

இன்று கடைசி தேதி... மத்திய அரசு நிறுவனத்தில் மாதம் ரூ.1,77,500 வரை சம்பளம்; உடனே அப்ளை பண்ணுங்க!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE