அதிகரிக்கும் கொரோனா எண்ணிக்கை:வழிகாட்டு நெறிமுறையை அறிவித்த எய்ம்ஸ்!

By காமதேனு

நுரையீரல் தொடர்பான பாதிகாப்புகள் கொண்ட நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனையைத் தீவிரப்படுத்த எய்ம்ஸ் மருத்துவமனை அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், டெல்லியில் முதல் ஜேஎன்.1 திரிபு தொற்று நேற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து புதிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ளது.

அதில், தீவிர சுவாசப் பிரச்சினை இருப்பவர்கள், 38 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு கிட்டத்தட்ட உடல் வெப்பத்துடன் காய்ச்சல் இருப்பவர்கள், கடந்த 10 நாள்களாக தொடர் இருமல் இருப்பவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் ஜே.என்.1 வகை கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

மாஸ்க்

இதன் காரணமாக தென்கிழக்காசிய நாடுகள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பு ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. பல்வேறு உலக நாடுகளில் குளிா்காலம் தொடங்கியுள்ள நிலையில், கொரோனா தொற்றுடன் பிற நோய்த் தொற்றுகளின் அதிகரிப்புக்கும் இந்தத் திரிபு காரணமாக அமையலாம் என்று அஞ்சப்படுகிறது. இது உலக அளவில் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

தமிழகமே கண்ணீரில் மூழ்கியது... நடிகர் விஜயகாந்த் திடீர் மரணம்... கதறும் தொண்டர்கள்!

விஜயகாந்த உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

ஒரே நேரத்தில் வருமான வரி, அமலாக்கத்துறை சோதனை: சென்னையில் பரபரப்பு!

மீண்டும் தென்மாவட்டங்களில் கனமழை: அச்சமூட்டும் வானிலை முன்னறிவிப்பு!

டெஸ்லா நிறுவனத்தில் அதிர்ச்சி! ரோபோ தாக்கி உயிர் தப்பிய ஊழியர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE