தோசை ரூ.600 மட்டுமே... விமான நிலையத்தில் விண்ணைத் தொடும் விலை

By காமதேனு

மும்பை விமான நிலையத்தில் தோசை ரூ.600 என விலை விண்ணைத் தொட்டிருப்பது குறித்து சமூக ஊடகம் பொங்கி வருகிறது.

மும்பை விமான நிலையத்தில் சாதாரணமாகத் தயாராகும் ஒரு தோசையின் விலை குறித்து, இன்ஸ்டாகிராமில் வெளியான பதிவு இணையத்தை தெறிக்க விட்டிருக்கிறது. சர்வதேச பயணிகள் வந்து செல்லும் விமான நிலையங்களில் உணவுப் பண்டங்களின் விலைவாசி சற்றே உயர்ந்து காணப்படுவது வாடிக்கை. ஆனால் அதற்கும் ஒரு எல்லை உண்டல்லவா?

தோசைக்கான விலைபட்டியல்

மும்பை விமான நிலையத்தில் தோசை ரகங்கள் ரூ.600 மற்றும் அதற்கு மேலாக விற்பனையாகும் தகவல் இன்ஸ்டாகிராமில் வெளியாகி இருக்கிறது. வெகு சாதாரண முறையில் தோசை தயாராவதை காட்டும் கேமரா, மெல்ல உயர்ந்து தோசை ரகங்களின் விலைப்பட்டியலை காட்டுகிறது.

மோர் உடன் ஒரு மசால் தோசை சாப்பிட ரூ600 கோருகிறது அந்த விமான நிலைய உணவகத்தின் விலைப்பட்டியல். இதே போன்று இதர தோசை ரகங்களுக்கும் ரூ600க்கும் மேல் விலைகளை பட்டியலிட்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் எந்தவொரு சிறப்பும் இன்றி வெகு சாதாரணமாகவே மேற்படி தோசை தயாராவதையும் அந்த வீடியோ பதிவு செய்துள்ளது.

இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டிருப்பதுடன், ஒரு லட்சத்துக்கும் மேலானோர் இதயங்களை பறக்க விட்டுள்ளனர். ஆனால் ரூ.40 முதல் ரூ60 என சாதாரணமாக வெளியே கிடைக்கும் தோசையின் விலை, மும்பை விமான நிலையத்தில் 10 மடங்கு உயர்த்தி விற்பதற்கு கண்டனமும் தெரிவித்து வருகிறார்கள்.

இதனை வேடிக்கையாகவும், வேதனையாகவும் எடுத்துக்கொண்டு இணையவாசிகள் கமெண்ட் செய்து வருகின்றனர். ’மும்பை ஏர்போர்ட் தோசையின் விலை, தங்கத்தின் விலையைவிட அதிகம்’ என்ற கமெண்ட் தாங்கியே மேற்படி வீடியோ வெளியாகி உள்ளது.

’இதுதான் மசாலா தோசையா? மசாலாவை தேட வேண்டியதாக இருக்கிறது’ என்று ஒருவர் நக்கலடிக்க, ’இது வெள்ளியைவிட விலை அதிகமானது’ என இன்னொரு இணையவாசி குறைபட்டிருக்கிறார். மற்றொருவர், தோசையின் அத்தனை விலைக்கு வித்தியாசமான விளக்கம் தந்துள்ளார்.

’அது தோசைக்கான விலை மட்டுமல்ல, விமான நிலையத்தில் உணவகம் நடத்துவதற்கான வாடகை, பணியாளர்களுக்கான ஊதியம் ஆகியவற்றோடு, நம் நாட்டில் விதிக்கப்படும் சூப்பர் வரி விதிப்புகள் உள்ளிட்டவற்றை அடக்கியது. இவையனைத்தும் சேர்ந்தே தோசையின் இத்தனை விலைவாசிக்கு காரணகி இருக்கின்றன’ என அவர் விளக்கியுள்ளார். இந்த கருத்து இணையவெளியில் வரவேற்பு பெற்று வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

இளம் பெண்ணுடன் ஜாலியாக ஊர் சுற்றும் விஷால்... கேமராவைப் பார்த்ததும் பதறி ஓடிய வீடியோ வைரல்!

இந்தியர்களை பாதுகாக்கும் அடையாளம் வீர்பால் திவாஸ்: பிரதமர் மோடி

கட்சிகளுக்கு ரூ.200 கோடி நன்கொடை... வேதாந்தா நிறுவனம் தாராளம்!

கேரளாவில் தாண்டவமாடும் கொரோனா: 3096 பேருக்கு சிகிச்சை!

தூத்துக்குடிக்கு ரஜினி திடீர் விசிட்... பின்னணி என்ன?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE