47 ஆயிரத்தை தொட்டது தங்கம் விலை... நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

By காமதேனு

தங்கம் கடந்த இரண்டு நாட்களாக விலை குறைந்து விற்பனையான நிலையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்துள்ளது நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம்

நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,860 ரூபாயாகவும், ஒரு சவரன் 46,880 ரூபாயாகவும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் 5,875 ரூபாயாகவும், சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 47,000 ரூபாயாகவும் விற்பனையாகிறது.

அதேபோல 24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து, 6,345 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து, 50,760 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் விலை உயர்ந்து விற்பனையாகி வரும் நிலையில், வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் குறைந்துள்ளது. கிராம் வெள்ளி 80.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி 80,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் காரணமாகவே தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE