நகைப்பிரியர்கள் `ஷாக்’ ... தங்கம் விலை உயர்ந்தது!

By காமதேனு

தங்கம் விலை நேற்று குறைந்து விற்பனையான நிலையில், இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது நகைப்பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம்

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் காரணமாகவே தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,825 ரூபாயாகவும், ஒரு சவரன் 46,600 ரூபாயாகவும் விற்பனையானது. அதுவே இன்று கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் 5,860 ரூபாயாகவும், சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 46,880 ரூபாயாகவும் விற்பனையாகிறது.

அதேபோல 24 கேரட் சுத்தத் தங்கம் கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து, 6,330 ரூபாய்க்கும், சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து, 50,640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

வெள்ளி

தங்கத்தை போலவே வெள்ளியும் இன்று விலை உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 30 காசுகள் உயர்ந்து 81 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 81,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாட்களில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...


இயல்பு நிலை திரும்புகிறது... தூத்துக்குடியில் ரயில்கள் இயக்கம்... நெல்லையில் பள்ளிகள் திறப்பு!

முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!

எரிவாயு சிலிண்டர் விலை ரூ.39 குறைந்தது... வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெட்டிக்கொலை!

ராகுல்காந்தி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE