குட்நியூஸ்... தமிழகத்தின் 7 ரயில் நிலையங்களுக்கு 'ஈட் ரைட் ஸ்டேஷன்' விருது!

By காமதேனு

சென்னை சென்ட்ரல், திருச்சி, மயிலாடுதுறை உட்பட தமிழ்நாட்டில் உள்ள ஏழு ரயில் நிலையங்களுக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் பாதுகாப்பான உணவுக்கான விருதை வழங்கியுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்

பாதுகாப்பான மற்றும் சத்தான உணவை வழங்கும் ரயில் நிலையங்களுக்கு, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கப்பட்டு வருகிறது.

திருச்சி ரயில் நிலையம்

அதன்படி இந்த ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் ஏழு ரயில் நிலையங்களுக்கு விருதுகள் கிடைத்திருக்கின்றன. சென்னை சென்ட்ரல், திருச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சூர், கும்பகோணம் ஆகிய ரயில் நிலையங்கள் மற்றும் மண்டல ரயில்வே பயிற்சி நிறுவனம் ஆகிய 7 இடங்களுக்கு 'ஈட் ரைட் ஸ்டேஷன்' (Eat Right Station) என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. கேரளாவில் 21 ரயிலில் நிலையங்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இதையும் வாசிக்கலாமே...

ஜனவரி 3ம் தேதி சென்னையில் புத்தக கண்காட்சி... முதல்வர் துவங்கி வைக்கிறார்!

பதற்றத்தில் திமுக... 'குற்றவாளி’ பொன்முடி... சொத்து குவிப்பு வழக்கில் இன்று காலை தண்டனை அறிவிப்பு!

வெள்ளப் பாதிப்பு: தென் மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு!

மீண்டும் ஒரு வாய்ப்பு... ஹஜ் பயணம் செல்ல விரும்புபவர்க

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE