வெள்ளப்பெருக்கால் உருண்டு வந்த பாறைகள்: 4வது நாளாக குற்றாலத்தில் குளிக்கத் தடை!

By காமதேனு

குற்றாலம் அருவியில் 4வது நாளாக வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருவதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிக்கிறது.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெய்த அதிகனமழை காரணமாக, தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. அபாய அளவையும் தாண்டி வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியதால், கடந்த 17-ம் தேதி முதல் குற்றாலம் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதே போல், பழைய குற்றாலம், ஐந்தருவியிலும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

தொடர் நீர்வரத்தால் குளிக்கத் தடை

இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவியில் நீர்வரத்து வெகுவாக குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் குற்றாலம் அருவியில் நீர் வரத்து குறையாததால் தடை நீடித்தது.

இந்நிலையில் இன்று ஏராளமானோர் குற்றாலம் அருவியில் குளிப்பதற்காக வருகை தந்திருந்தனர். ஆனாலும், அருவியில் நீர்வரத்து குறையாததாலும், சிறுசிறு பாறைகள் அருவியில் அடித்து வரப்படுவதாலும், பாதுகாப்பு கருதி இன்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

ஆர்ப்பரித்துக் கொட்டும் ஐந்தருவி

தென் மாவட்டங்களில் மழை பெருமளவு குறைந்துள்ள போதும், மேற்கு தொடர்ச்சி மலைகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால், நீர்வரத்து அதிகரித்துள்ளதாகவும், மழை சற்று குறைந்தால், நீர்வரத்தும் குறையும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். வெள்ளம் தொடர்ந்து நீடிப்பதால், உள்ளூர் வியாபாரிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...


எழுத்தாளர் தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது; அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!

நிவாரணப் பொருட்களை அனுப்ப கட்டணம் கிடையாது... தமிழக அரசு அறிவிப்பு!

மாரடைப்பால் 7-ம் வகுப்பு மாணவி பலி: பள்ளி செல்லும் போது நடந்த பரிதாபம்!

குளியலறையில் ரகசிய கேமரா: மாணவிகள் அதிர்ச்சி!

வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட மறுத்த அமைச்சர்... 'இனி ஓட்டு கிடையாது...' கொந்தளித்த மக்கள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE