வெளுத்து வாங்கும் கனமழை: மதுரையில் இருந்து தென் தமிழக ரயில்கள் புறப்படும்!

By காமதேனு

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தென் தமிழக ரயில்கள் மதுரையில் இருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி-திருநெல்வேலி நெடுஞ்சாலையில் தேங்கிய மழைநீர்.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நேற்று முன்தினம் தொடங்கி தற்போது வரை மிக, மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் மூழ்கியுள்ளன. குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக திருச்செந்தூர் - தூத்துக்குடி இடையேயான சாலைகளில் இடுப்பளவுக்கு மேல் வெள்ளம் செல்வதால் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மதுரை ரயில் நிலையம்.

இந்நிலையில், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து புறப்பட வேண்டிய ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டு, மதுரையில் இருந்து இயக்கப்படுகிறது. மதுரையில் இருந்து இயக்கப்படும் 9 ரயில்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

1. 22667 நாகர்கோவில் - கோவை அதிவிரைவு ரயில்

2. 12634 கன்னியாகுமரி - சென்னை எழும்பூர் அதிவிரைவு ரயில்

3. 22658 நாகர்கோவில் - தாம்பரம் அதிவிரைவு ரயில்

4. 17236 நாகர்கோவில் - எஸ்எம்விடி பெங்களூரு விரைவு ரயில்

5. 11022 திருநெல்வேலி - தாதர் விரைவு ரயில்

6. 16235 தூத்துக்குடி - மைசூர் விரைவு ரயில்

7. 20606 திருச்செந்தூர் - மைசூர் அதிவிரைவு ரயில்

8. 12632 திருநெல்வேலி - சென்னை எழும்பூர் அதிவிரைவு ரயில்

9. 12694 தூத்துக்குடி - சென்னை எழும்பூர் விரைவு ரயில்.

முன்னதாக, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இயக்கப்படும் 13 ரயில்கள் மதுரை, திண்டுக்கல் மற்றும் திருவனந்தபுரம் ரயில் நிலையங்களில் இருந்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

பரபரப்பு... ஆளுநருக்கு எதிராக கல்லூரிகளில் பேனர்! களத்தில் இறங்கிய மாணவர் அமைப்பு!

கனமழை... களத்தில் சுழன்றடிக்கும் கனிமொழி எம்.பி

1000 ரூபாய் கடனுக்காக நண்பர் குத்திக்கொலை... சடலத்துடன் காவல் நிலையத்தில் சரணடைந்த இளைஞர்!

நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.207 கோடி சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை அதிரடி

81 கோடி இந்தியர்களின் தரவுகள் திருட்டு... 4 இளைஞர்கள் கைது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE