பிரியாணியை அதிகம் நேசிக்கும் இந்தியர்கள்... 8-வது ஆண்டாக ஸ்விக்கி ஆர்டரில் முதலிடம்

By காமதேனு

உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி பட்டியலிட்டுள்ள 2023-ம் ஆண்டில் ஆர்டர் செய்யப்பட்ட டாப் உணவுகளின் வரிசையில், தொடர்ந்து 8வது ஆண்டாக பிரியாணி முதலிடம் பிடித்துள்ளது.

2023-ம் ஆண்டின் இறுதியை நெருங்கும் சூழலில் வழக்கம்போல ஸ்விக்கி நிறுவனம் இந்த ஆண்டின் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு ரகங்கள் உட்பட பல்வேறு சுவாரசிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி ஸ்விக்கி வாயிலாக ஆர்டர் செய்யப்பட்டவற்றில் தொடர்ந்து 8வது ஆண்டாக பிரியாணி முதலிடம் பிடித்துள்ளது. விநாடிக்கு இரண்டரை பிரியாணி என்ற வேகத்தில் இந்த ஆண்டில் இந்தியர்கள் பிரியாணிக்கான ஆர்டர்களை குவித்துள்ளனர். இதில் சுமார் 25 லட்சம் பேர் பிரியாணியை ஆர்டர் செய்யும் நோக்கில் ஸ்விக்கி உடன் அறிமுகமாகி உள்ளானர்.

ஸ்விக்கி

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று மட்டும் ஸ்விக்கியில் சுமார் 4.30 லட்சம் பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் பிரியாணி நேசர்கள் ஹைதராபாத்தில்தான் நிறைந்திருக்கிறார்கள். இங்கிருந்துதான் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான பிரியாணி ஆர்டர் குவிந்திருக்கிறது. அதிலும் ஒரு ஹைதராபாத் வாசி, மூன்று வேளையும் பிரியாணி உண்டே ஜீவிக்கும் ஜீவனாக, ஆண்டு நெடுக 1,633 பிரியாணிகளை ஆர்டர் செய்திருக்கிறார்.

அசைவ பிரியாணியில் வழக்கம்போல சிக்கன் பிரியாணியே சிம்மாசனமிட்டிருக்கிறது. ஆனபோதும் வெஜ் பிரியாணியை இந்தியர்கள் முழுவதுமாக நிராகரிக்கவில்லை. 5க்கு 1 ஒன்று என்ற விகிதத்தில் அசைவ - சைவ பிரியாணிகள் ஸ்விக்கி மூலமாக விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

இது தவிர்த்து இந்தியர்களின் இதர உணவு ரசனையையும் ஸ்விக்கி பகிர்ந்துள்ளது. கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப் போட்டியன்று நிமிடத்துக்கு 188 பீட்சாக்கள் ஆர்டர் செய்யப்பட்டன. இவர்களில் பெரும்பாலானவர்கள் சென்னை, டெல்லி மற்றும் ஹைதராபாத்தை சேர்ந்தவர்கள். துர்கா பூஜை தினத்தன்று 77 லட்சம் குலோப் ஜாமூன் ஆர்டர்கள் குவிந்தன.

ஸ்விக்கி

பிரியாணிக்கு ஹைதராபாத் என்றால், கேக் ஆர்டரில் பெங்களூர் முன் நிற்கிறது. அதிலும் சாக்கலேட் கேக் அதிகளவில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. 85 லட்சம் சாக்லேட் கேக்குகள் ஆர்டர் செய்யபட்டுள்ளன. அதிலும் மதர்ஸ் டே தினத்தன்று, தங்களது அன்னையருக்கு ஆர்டர் செய்ததில் அன்றைய தினத்தில் சாக்லேட் கேக் விற்பனை உச்சம் தொட்டிருக்கிறது. சென்னை வாடிக்கையாளர் ஒருவர் ஒரே நாளில் 31,748 ரூபாய்க்கு உணவு ரகங்களை ஆர்டர் செய்துள்ளார். இவை அனைத்தும் ஜன.1 முதல் நவ.23 வரையிலான ஸ்விக்கி தரவுகளில் இடம்பெற்றிருக்கின்றன.

இதையும் வாசிக்கலாமே...


திமுக கொடிக் கம்பம் சரிந்து விழுந்து விபத்து... வாகனத்தில் சென்றவர் காயம்!

ராஷ்மிகா மந்தனாவின் அடுத்த ஆபாச வீடியோ... டீப் ஃபேக் வீடியோக்களால் கதறும் நடிகைகள்!

மாமியாரை கொடூரமாக தாக்கிய மருமகள்... பதைபதைக்க வைக்கும் வீடியோ வைரல்!

புதுவீட்டில் குடியேறிய 10 நாட்களில் தம்பதி தற்கொலை... கரூர் அருகே சோகம்!

தோனிக்கு கெளரவம்... 7ம் நம்பர் ஜெர்சிக்கு ஓய்வு அறிவிப்பு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE