ரயிலில் திடீரென ஸ்பைடர் மேனாக மாறிய வாலிபர்... வைரலாகும் அசத்தல் வீடியோ!

By காமதேனு

ரயிலில் பயணம் செய்த வாலிபர் ஒருவர், கழிப்பறைக்குச் செல்வதற்காக திடீரென ஸ்பைடர் மேன் போல மாறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரயில் பயணிகள்

இந்தியாவில் பயணம் செய்வதற்கு பொதுமக்கள் அதிகம் விரும்புவது ரயிலைத் தான். காரணம் குறைந்த செலவில் மிக நீண்ட தூரம் பயணம் செய்ய முடியும் என்ற காரணம் தான். இதனால், இந்தியாவில் தினமும் சராசரியாக 1.85 கோடி பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். இந்திய ரயில்வே தற்போது தினமும் 14,300 ரயில்களை இயக்குகிறது. ஆனாலும், ரயில்களில் கூட்டம் குறைவதில்லை.

ஸ்பைடர் மேன்

இருக்கைகள் நிரம்பினாலும், அதை விட எண்ணிக்கையில் மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். இப்படி ரயிலில் பயணம் செய்யும் பயணிகள், கழிப்பறைக்குச் செல்வது மிக சவாலான காரியம். அன்றாடம் எண்ணற்ற பயணிகள் இந்த பிரச்சினையில் தவிக்கின்றனர்.

இந்த நிலையில், ரயில் பயணி ஒருவர், கழிப்பறை செல்வதற்காக சிலந்தி போல, ரயில் பெட்டியின் மேல் பகுதியில் ஊர்ந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. நெரிசல் மிகுந்த ரயிலில் கழிவறைக்குச் செல்லும் அவரது வைரல் வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த காட்சியை இன்ஸ்டாகிராம் பயனர் அபினவ் லமேஷ் படம் பிடித்துள்ளார். பயணிகளின் தலைக்கு மேலே உள்ள குறுகிய இடைவெளியில், அந்த பயணி வேகமாகவும் கவனமாகவும் நகர்வதையும் வீடியோவில் காணலாம்.

அவரது அசைவுகள் மற்ற பயணிகளுக்கு ஸ்பைடர் மேனின் அசைவுகளை நினைவூட்டியது. இந்த காட்சி சிலருக்கு நகைச்சுவையை ஏற்படுத்தினாலும், ரயிலில் பயணம் செய்யும் போது பயணிகள் எதிர்கொள்ளும் சவால்களில் இதுவும் ஒன்று என்பது மட்டும் மறக்க முடியாத உண்மை.

இதையும் வாசிக்கலாமே...

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்... பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்!

‘ஜப்பான், பிலிப்பைன்ஸில் சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு... சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சரிந்தன!

கேளிக்கை விடுதியில் பயங்கர தீ விபத்து... 29 பேர் எரிந்து உயிரிழந்த பரிதாபம்!

வள்ளி கும்மி நடனமாடி வாக்கு சேகரித்த அண்ணாமலை... கோவை பரப்புரையில் குதூகலம்!

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ரூ.4 கோடி பறிமுதல்... வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE