திருப்பூர் : குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட பள்ளம்... பழங்கால முதுமக்கள் தாழி கண்டெடுப்பு!

By காமதேனு

திருப்பூரில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டிய பள்ளத்தில் பழங்காலத்து முதுமக்கள் தாழி மற்றும் எலும்புத் துண்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து பள்ளம் தோண்டும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

எலும்புத்துண்டுகள்

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 45வது வார்டு குப்புசாமிபுரம் 2வது வீதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக மாநகராட்சி ஊழியர்கள் நேற்று பள்ளம் தோண்டினர். அப்போது பழங்காலத்து முதுமக்கள் தாழி இருப்பது கண்டறியப்பட்டது.

உடனடியாக பள்ளம் தோண்டும் பணி நிறுத்தப்பட்டு முதுமக்கள் தாழி பத்திரமாக எடுக்கும் பணி நடைபெற்றது. தகவல் அறிந்ததும் மாநகராட்சி ஆணையர் பவன்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, முதுமக்கள் தாழியில் மனித எலும்புகள் இருந்தது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து முதுமக்கள் தாழி மற்றும் அதிலிருந்து எடுக்கப்பட்ட எலும்புகள் அனைத்தும் பத்திரப்படுத்தப்பட்டு தொல்பொருள் துறையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக ஆணையர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE