ஆஹா... அசத்தல்... கவனத்தை ஈர்த்த மூங்கில் புடவைகள்... விலை 5,500 ரூபாய் தான்!

By காமதேனு

ஹைதராபாத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களின் கண்காட்சி தொடங்கியுள்ளது. இதில் மூங்கிலால் செய்யப்பட்ட புடவைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் மேற்கு வங்காளத்தின் சாந்தி நிகேதனைச் சேர்ந்த கைவினைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கைவினைக் கண்காட்சி நேற்று தொடங்கியது. செகாந்திரபாத் மற்கு மாரெட்பல்லியில் உள்ள ஒய்டபிள்யுசிஏவில் நடக்கும் இந்த கண்காட்சியில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பல பொருட்கள் இடம் பெற்றுள்ளன.

இதில் சிறப்பு அம்சம் என்பது மூங்கில் ஜம்தானி புடவை, டிசைனர் கெட்டில் மற்றும் வர்ணம் பூசப்பட்ட குடைகளாகும். மூங்கில் ஜம்தானி புடவைகள் 5500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன.

" நம் முன்னோர்கள் இயற்கை இழைகளாலான ஆடைகளை அணிந்தனர். இடையில் நைலான், மைக்ரோஃபைபர் போன்ற செயற்கை இழைகளுக்கு மாறினோம். ஆனால், இப்போது மீண்டும் நாம் நிலையான ஃபேஷனை நோக்கி நகர்கிறோம். சணல், மூங்கில், வாழை, சணல் மற்றும் கற்றாழை போன்ற தாவரங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட இயற்கை நார்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் புடவைகள் இப்போது ஒரு புதிய ஃபேஷனாக உள்ளன" என்று சுயம்பர் நாரியின் குழு உறுப்பினர்களில் ஒருவரான சைகத் பானர்ஜி கூறினார். இந்த கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE