தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்....1250 சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு முடிவு!

By காமதேனு

வார இறுதி நாட்கள் மற்றும் விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்பவர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

இந்த வாரம் சனி, ஞாயிறு வார இறுதி நாட்கள் தவிர திங்கட்கிழமை அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதால் அன்றைய தினமும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவார்கள்.

ரயில்கள் அனைத்திலும் கூட்டம் நிரம்பி வழியும் என்பதால் பெரும்பாலான மக்கள் வேறு வழியின்றி பேருந்து பயணத்தை விரும்புகிறார்கள்.

அரசு பேருந்துகள்

அதனால் அவர்களின் வசதிக்காக வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமையில் தொடர்ந்து வழக்கமாக இயங்கும் பேருந்துகளை விட கூடுதலாக சிறப்பு பேருந்துகளையும் இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

மொத்தம் 1250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. திங்கட்கிழமை அன்று சொந்த ஊர்களில் இருந்து மக்கள் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்புவார்கள் என்பதால் இதே அளவு சிறப்பு பேருந்துகளை வெளியூர்களில் இருந்து இயக்கவும் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE