யேமன் நபரின் தலையில் பாய்ந்த தோட்டா... 18 ஆண்டுகளுக்குப் பின்னர் அகற்றி பெங்களூரு மருத்துவர்கள் சாதனை

By காமதேனு

யேமன் நாட்டைச் சேர்ந்தவரின் தலையில் பாய்ந்த துப்பாக்கித் தோட்டா, பெங்களூரு மருத்துவர்கள் உதவியோடு 18 ஆண்டுகளுக்குப் பின்னர் வெற்றிகரமாக நீக்கப்பட்டது.

சலே என்ற பெயரில் அறியப்படும் யேமனை சேர்ந்த நபர் அண்மையில் பெங்களூருவின் ஆஸ்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தனது 10 வயதில் தலையில் துப்பாக்கி குண்டினால் தாக்கப்பட்டார். யேமனில் இரு குழுக்கள் இடையிலான மோதலின் போது, 10 சிறுவன் சலேயின் மீது தவறுதலாக துப்பாக்கி குண்டு பாய்ந்தது. பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்த சலே, உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

புல்லட்

அங்கே கிடைத்த அலட்சியமான மருத்துவ சிகிச்சை காரணமாக, சலே கபாலா எலும்பினில் பொதிந்திருந்த துப்பாக்கித் தோட்டா நீக்கப்படவில்லை. வெளிப்புற காயத்துக்கு மட்டுமே சிகிச்சை அளித்து அனுப்பி வைத்தார்கள். துரதிருஷ்ட வசமாக இந்த உண்மை சலே பெற்றோருக்கு தாமதமாகவே தெரிய வந்தது. பின்னர் மருத்துவர்களை அணுகியபோது, தோட்டாவை நீக்குவது உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடும் என்று அவர்கள் தெரிவித்ததில் அந்த முயற்சி கைவிடப்பட்டது.

ஆனால் தலையில் தங்கிய துப்பாக்கித் தோட்டாவால், சலே கடும் பக்கவிளைவுகளுக்கு ஆளானார். காது கேளாதவராக ஆனதோடு, நாள்பட்ட தலைவலியாலும் பாதிக்கப்பட்டார். இதனால் நிம்மதி இழந்தார். சுமார் 18 ஆண்டுகளாக அவரது இந்தப் போராட்டம் தொடர்ந்தது.

அறுவை சிகிச்சை

இறுதியாக பெங்களூர் மருத்துவமனை தொடர்பு கிடைத்ததில், உடனடியாக யேமனில் இருந்து கிளம்பினார். பெங்களூரு ஆஸ்டர் மருத்துவமனையில், சலேவுக்கான மருத்துவக் குழு பெரும் சவாலை எதிர்கொண்டது. அவரது உயிருக்கு பாதிப்பு இன்றியும், கபாலத்துக்குள் கைவைப்பதால் பக்கவிளைவுகள் இன்றியும் மருத்துவ முயற்சிகள் தொடங்கப்பட்டன. அப்படியும் சலே தலையில் பாய்ந்த தோட்டாவை நீக்க நீண்ட தயாரிப்பும், திட்டமிடலும் தேவைப்பட்டது. பின்னர் சிக்கலான அறுவை சிகிச்சை வாயிலாக தலையில் எலும்பில் தங்கியிருந்த தோட்டா வெற்றிகரமாக அகற்றப்பட்டது.

தோட்டா முழுமையாக அகற்றப்பட்டதில், சலே தனது காதுகேட்கும் தன்மையை விரைவில் மீளப் பெற்றார். மேலும் தலை மற்றும் காது வலிக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. 2 குழந்தைகளின் தந்தையாகி இருக்கும் சலே, தனது குழந்தைகளின் குரலை நேரில் கேட்பதற்காக உற்சாகமாக யேமன் திரும்பியிருக்கிறார்.

இதையும் வாசிக்கலாமே...

பகீர்... காதல் தோல்வியால் தீக்குளித்த கல்லூரி மாணவி!

ஓடும் ரயிலில் இளம்பெண் குத்தாட்டம்... இணையத்தை தெறிக்க விட்ட ’ட்யூப் கேர்ள்’ சப்ரினா!

காதலை பிரேக் அப் செய்த சீரியல் நடிகை!

8வது மாடியில் இருந்து தவறி விழுந்து 3 வயது குழந்தை பலி!

மெட்ரோ ரயில் தடத்தில் பரபரப்பு... தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE