பொங்கல் விடுமுறைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!

By காமதேனு

பொங்கல், தீபாவளி பண்டிகை காலங்களில் 120 நாட்களுக்கு முன்னரே ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொள்ளலாம். அதன்படி இன்று காலை 8 மணிக்கு பொங்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.

2024ம் ஆண்டு ஜனவரி 14 போகி, ஜனவரி 15 பொங்கல், ஜனவரி 16 மாட்டுப் பொங்கல், ஜனவரி 17 காணும் பொங்கல் என தமிழர் திருவிழா கொண்டாட்டம் களைகட்ட இருக்கிறது. பொங்கல் பண்டிகைகள் ஜனவரி 14 ஞாயிற்றுக்கிழமை தொடங்குவதால் ஜனவரி 12ம் தேதி வெள்ளிக்கிழமையே வழக்கம் போல சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் புறப்பட்டுச் செல்வர்.

டிக்கெட் முன்பதிவுகளை வீட்டில் இருந்தபடியே https://www.irctc.co.in/nget/ இணையதளம் அல்லது டிக்கெட் முன்பதிவு கவுண்ட்டர்களில் பதிவு செய்யலாம். இதன்படி இன்று டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் ஜனவரி 11ம் தேதி ரயிலில் பயணம் செய்யலாம்.

நாளை முன்பதிவு செய்பவர்கள் ஜனவரி 12ம் தேதி பயணம் செய்யலாம். அதாவது ஜனவரி 11 முதல் ஜனவரி 17 வரை பயணம் செய்ய இன்று முதல் செப்டம்பர் 19ம் தேதி வரை முன்பதிவு செய்யலாம். இதற்கான விரிவான ஏற்பாடுகளை ரயில்வே நிர்வாகம் செய்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE