நாங்க இருக்கோம்... மக்களின் கதைகளைக் கேட்கும் டேபிள் அண்ட் ஸ்டூல்; மனிதம் காக்கும் இளைஞர் குழு!

By காமதேனு

தங்களின் கதைகளைக் கேட்க ஆள் இல்லாமல் இருக்கும் மக்களுக்காகவே மூன்று இளைஞர்கள் இணைந்து டேபிள் அண்ட் ஸ்டூல் என்ற புதிய முன்னெடுப்பை எடுத்துள்ளனர்.

என்.ஜி.ஓ ஊழியர் ஜினோ ஜே அம்பக்காடு (24), ஐடி ஊழியர் தாமோதரன் (25), கல்லூரி மாணவர் ராகுல் மகேஷ் (20) ஆகிய மூவரும் இணைந்து கடந்த ஏப்ரல் மாதம் டேபிள் அண்ட் ஸ்டூல் என்ற நிறுவனத்தை தொடங்கினர்.

இவர்கள் மூவரும் இன்ஸ்டாகிராம் பயோவில், தங்கள் கதைகளைச் சொல்ல விரும்பும் மக்கள் நிறைந்த உலகில், அவற்றை கேட்க நாங்கள் இருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர். ஒவ்வொரு ஞாயிறு அன்றும் மக்களின் கதைகளைக் கேட்க மூவரும் டேபிள் மற்றும் ஸ்டூலுடன் பொது இடங்களில் ஐக்கியமாகின்றனர்.

தெருக்கள், கடற்கரை, பூங்கா என வெவ்வேறு இடங்களுக்கு இவர்கள் சென்று கொண்டே இருக்கிறார்கள். ஒரு நாள் நள்ளிரவு ஜினோவிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்புதான் இந்தத் திட்டத்தை தொடங்க காரணம் என்று ராகுல் தெரிவித்துள்ளார்.

ஜினோவை அழைத்த அவர் நண்பர் ஒருவர், இப்போதெல்லாம் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. ஆனால் கேட்பதற்கு தான் யாருக்கும் நேரம் இல்லை என்று கூறியுள்ளார். அதில் இருந்து உருவானது தான் டேபிள் அண்ட் ஸ்டூல்.

இவர்களிடம் வரும் மக்கள் தங்கள் கதைகளை மனம்விட்டு கூறி ஆறுதல் அடைகின்றனர். ஞாயிற்றுக்கிழமைகளில் ஓய்வெடுப்பது வழக்கமாக சோர்வை ஏற்படுத்தும் என்றும் ஆனால், இதைச் செய்வது மகிழ்ச்சியாக இருப்பதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.

வெவ்வேறு நபர்களுடன் பேசுவது நல்ல அனுபவமாக இருக்கிறது என்றும், இடங்களைத் தேடுவது, மேஜை மற்றும் ஸ்டூலை வைப்பது, மக்கள் தங்கள் கதைகளைப் பகிர்ந்து கொள்வதற்காகக் காத்திருப்பது இப்போது வாடிக்கையாகி விட்டது என்று டேபிள் அண்ட் ஸ்டூல் குழுவினர் மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE