அதிர்ச்சி... மகளிர் உரிமைத்தொகை கோரிய 57,00,000 பெண்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

By காமதேனு

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகைக் கோரிய பெண்களில், 57 லட்சம் பெண்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது பெண்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் அறிக்கையில், குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் பின்னர், அதில் தகுதி வரைமுறைகளை நிர்ணயித்தது சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், தற்போது 57 லட்சம் பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது மேலும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

மகளிர் உரிமைத் தொகைக்கு 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், தகுதியுள்ளவர்கள் என 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தகுதி வாய்ந்த பெண்களுக்கு உரிமைத் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் கிடைக்கும் வகையில் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளோம். தகுதி பெற்ற குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் வங்கிகளில் அவர்களது கணக்கில் உரிமைத் தொகை வரவு வைக்கப்படுகிறது. ஏ.டி.எம். கார்டுகள் முதற்கட்டமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலும், படிப்படியாக விரைவில் அனைவருக்கும் வழங்கப்பட உள்ளது. ஆனால் ஏ.டி.எம். கார்டு வழங்கப்படுவதற்காக காத்திருக்காமல், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

வரும் 15ம் தேதி மகளிருக்கு அனுப்பி வைக்கப்படும் குறுஞ்செய்தியில், பணம் எடுப்பது தொடர்பாக ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், அதுகுறித்து தகவல் தெரிவிக்க Toll-Free எண் அறிவிக்கப்பட இருக்கிறது. 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வந்திருந்த நிலையில், தகுதியுள்ளவர்கள் என 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 57 லட்சம் பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அப்படியானால் மற்றவர்களது கோரிக்கைகள் ஏன் ஏற்கப்படவில்லை என்பதை நாம் அவர்களுக்குச் சொல்லியாக வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது. எந்த அடிப்படையில் உங்களது கோரிக்கையை எங்களால் ஏற்க முடியவில்லை என்பதற்கான காரணத்தை குறிப்பிட்டு அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட இருக்கிறது. சிலருக்கு சந்தேகங்கள் இருக்கும் பட்சத்தில் மறுபடியும் விண்ணப்பிக்க அவர்களுக்கும் வாய்ப்பு வழங்குகிறது. வரும் 15ம் நாள் மாவட்டத் தலைநகரங்களில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடக்க விழா நடக்க இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE