தங்கம் விலை இன்றும் குறைந்தது.. சவரன் 46 ஆயிரத்திற்கு விற்பனை!

By காமதேனு

கடந்த சில தினங்களுக்கு முன்பு உச்சம் தொட்ட தங்கத்தின் விலை, மெல்ல குறைய தொடங்கி இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்து 46,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை மெல்ல குறையத் தொடங்கியுள்ளது நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம்

தங்கம் நேற்று எந்தவிதமான மாற்றமும் இன்றி விற்பனையான நிலையில், இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 5,750 ரூபாயாகவும், சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 46,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே சமயம் 24 கேரட் சுத்த தங்கம், கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து, 6,220 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, 49,760 ரூபாய்க்கு விற்பனையாகிறது

வெள்ளி

வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.77.80 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி 77,800 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் காரணமாகவே தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வரும் நாட்களில் தங்கத்தின் விலை எகிறக் கூடும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE