'சிங்கப்பூர் சேலை அந்த செவத்தப் பொண்ணு மேல'... சீனாவை கலக்கும் இளம்பெண்ணின் வீடியோ!

By காமதேனு

இந்திய கலாச்சார அடையாளத்துடன் சிவப்பு நிற சேலை அணிந்து இளம்பெண் ஒருவர், சீனா நகர வீதியில் ஒயிலாக நடந்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

நெய்யப்படும் சேலை

இந்திய தொழில்களில் முக்கியமானதாக நெசவு உள்ளது. இந்த நெசவு மூலம் விதவிதமான சேலைகளை நெசவாளர்கள் உருவாக்கி வருகின்றனர். பல்வேறு துணிகளில் உருவாக்கப்படும் சேலைகளின் வண்ணங்கள் மட்டுமன்றி அவற்றிலும் தரமும் உலகம் முழுவதும் உள்ள மக்களால் நேசிக்கப்படுகிறது. இந்திய பெண்களின் கலாச்சார உடைகளில் சேலைக்கு முக்கியப் பங்கு உண்டு. இதன் காரணமாகவே ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 21-ம் தேதி சேலை தினமாகக் கொண்டாடப்படுகிறது.

சேலையில் வெரோனிகா கோயல்

இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை மற்றும் நேபாளம் போன்ற நாடுகளிலும் உள்ள பெண்கள் சேலையை விரும்பி அணிகின்றனர். இந்த நிலையில் சீனாவில் சிறப்பு நிற சேலை அணிந்த பெண் ஒருவர், வீதியில் ஒயிலாக நடமாடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களை கலக்கி வருகிறது. சீனாவின் நகர்ப்புறத்தில் பரபரப்பான வீதியில் இந்திய பாரம்பரிய சேலையை அணிந்து செல்லும் அந்த பெண்ணை அந்நாட்டு மக்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.

போலாந்தைச் சேர்ந்த வெரோனிகா கோயல் என்ற இளம்பெண், இஷான் கோயல் என்ற இந்தியரை மணந்தார். அவர் சமீபத்தில் வெளியிட்டது தான் இந்த சேலை வீடியோ. வெரோனிகா கோயல் சீனா தெருக்களில் சேலையுடன் நடந்து செல்லும் அந்த அழகிய வீடியோவிற்கு இட்ட தலைப்பு, 'ஏன் இந்தியாவில் மட்டும் சேலை அணிய வேண்டுமா?'. இந்த வீடியோவிற்கு லைக்கள் குவித்து வருகின்றன. இந்த வைரல் வீடியோ இதுவரை 14 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

தூத்துக்குடியில் கதறியழுத மூதாட்டி... கண்ணீரைத் துடைக்க முதல்வர் ஸ்டாலின் செய்த காரியம்!

எங்க தொகுதிக்கு என்னதான் ஆச்சு?... கலங்கும் மயிலாடுதுறை காங்கிரஸ்!

அனல் பறக்கும் தூத்துக்குடி... இன்று ஒரே நாளில் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!

தேச தந்தையை பாதுகாக்க நன்கொடை தந்தை என்ன செய்வார்? பாஜக மீது காங்கிரஸ் தாக்கு

அநியாயம் பண்ணாதீங்க...விஜய் ரசிகர்களிடம் கதறிய இயக்குநர் வெங்கட்பிரபு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE